பெட்ரோல், டீசல் விலை உயருகிறதுடெல்லி:பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலையை உயர்த்துவது குறித்து நிதியமைச்சர் ப.சிதம்பரம், பெட்ரோலியஅமைச்சர் மணிசங்கர் அய்யர் ஆகியோருடன் பிரதமர் மன்மோகன் சிங் இன்று ஆலோசனை நடத்தினார்.சர்வதேச அளவில் பெட்ரோலிய குரூட் எண்ணெயின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்த நிலையில்,தேர்தல் வந்ததையடுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல், கேஸ் விலையை பா.ஜ.க. அரசு உயர்த்தவில்லை.இதனால் கடந்த மூன்று மாதங்களில் இந்தியன் ஆயில் கார்ப்ரேசனுக்கு மட்டும் ரூ. 2,050 கோடி நஷ்டம்ஏற்பட்டுள்ளது. பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியே ஆக வேண்டும் என புதிய அரசிடம்பெட்ரோலிய நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன.ஆனால், ஆட்சிக்கு வந்தவுடேனேயே விலையை உயர்த்த விரும்பாமல் காங்கிரஸ் அரசும் இழுத்தடித்துக்கொண்டுள்ளது.பெட்ரோலிய எண்ணெய் மீதான இறக்குமதி வரியையும், சுங்க வரியையும் குறைத்தால் பெட்ரோல் விலைஉயர்வைத் தவிர்க்கலாம் அல்லது குறைக்கலாம் என மணிசங்கர் அய்யர் கூறி வருகிறார்.ஆனால், இதனால் நாட்டின் வரி வருவாயில் பெரும் ஓட்டை விழும் என பிரதமரும் சிதம்பரமும் கருதுகின்றனர்.இந்த விவகாரம் குறித்து சிதம்பரம்- அய்யர் பேச்சு நடத்திவிட்டனர்.இந் நிலையில் இன்று இருவருடனும் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார்.பெட்ரோலிய குரூட் எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு 7 டாலர் உயர்ந்துள்ளதால், பெட்ரோல்-டீசலின்விலையை லிட்டருக்கு ரூ. 2 முதல் ரூ. 3 வரை உயர்த்தியாக வேண்டிய நிலையில் மத்திய அரசு உள்ளது.ஆனால், பொது மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பில்லாத வகையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ 1ம்,டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 50 பைசாவும் மட்டும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.கூட்டணிக் கட்சிகளுடன் பிரதமர் இன்று ஆலோசனை நடத்திய பின்னர் நாளை விலை உயர்வுஅறிவிக்கப்படலாம்.சமையல் கேஸ் விலையை மத்திய அரசு உயர்த்தாது என்று தெரிகிறது.
டெல்லி:
பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலையை உயர்த்துவது குறித்து நிதியமைச்சர் ப.சிதம்பரம், பெட்ரோலியஅமைச்சர் மணிசங்கர் அய்யர் ஆகியோருடன் பிரதமர் மன்மோகன் சிங் இன்று ஆலோசனை நடத்தினார்.
சர்வதேச அளவில் பெட்ரோலிய குரூட் எண்ணெயின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்த நிலையில்,தேர்தல் வந்ததையடுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல், கேஸ் விலையை பா.ஜ.க. அரசு உயர்த்தவில்லை.
இதனால் கடந்த மூன்று மாதங்களில் இந்தியன் ஆயில் கார்ப்ரேசனுக்கு மட்டும் ரூ. 2,050 கோடி நஷ்டம்ஏற்பட்டுள்ளது. பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியே ஆக வேண்டும் என புதிய அரசிடம்பெட்ரோலிய நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், ஆட்சிக்கு வந்தவுடேனேயே விலையை உயர்த்த விரும்பாமல் காங்கிரஸ் அரசும் இழுத்தடித்துக்கொண்டுள்ளது.
பெட்ரோலிய எண்ணெய் மீதான இறக்குமதி வரியையும், சுங்க வரியையும் குறைத்தால் பெட்ரோல் விலைஉயர்வைத் தவிர்க்கலாம் அல்லது குறைக்கலாம் என மணிசங்கர் அய்யர் கூறி வருகிறார்.
ஆனால், இதனால் நாட்டின் வரி வருவாயில் பெரும் ஓட்டை விழும் என பிரதமரும் சிதம்பரமும் கருதுகின்றனர்.இந்த விவகாரம் குறித்து சிதம்பரம்- அய்யர் பேச்சு நடத்திவிட்டனர்.
இந் நிலையில் இன்று இருவருடனும் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார்.
பெட்ரோலிய குரூட் எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு 7 டாலர் உயர்ந்துள்ளதால், பெட்ரோல்-டீசலின்விலையை லிட்டருக்கு ரூ. 2 முதல் ரூ. 3 வரை உயர்த்தியாக வேண்டிய நிலையில் மத்திய அரசு உள்ளது.
ஆனால், பொது மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பில்லாத வகையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ 1ம்,டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 50 பைசாவும் மட்டும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கூட்டணிக் கட்சிகளுடன் பிரதமர் இன்று ஆலோசனை நடத்திய பின்னர் நாளை விலை உயர்வுஅறிவிக்கப்படலாம்.
சமையல் கேஸ் விலையை மத்திய அரசு உயர்த்தாது என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications