கர்நாடகத்தில் கன மழை: கபிணி நிரம்புகிறது
பெங்களூர் - சென்னை:
கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 4 முக்கிய அணைகளின் நீர் பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக கபிணி அணைக்கு நீர் வரத்து பெருமளவில் அதிகரித்துள்ளதால் அந்த அணை நிரையத் தொடங்கியுள்ளது.
கர்நாடகத்திலும்,கேரளாவிலும் தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக இரு மாநிலங்களிலும் கன மழை பெய்து வருகிறது. கர்நாடகத்தில் கபிணி, கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய நான்கு காவிரி அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது.
இதில் கபிணி அணைக்கு கேரளாவிலிருந்தும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அந்த அணை இன்னும் சில நாட்களில் நிறைந்து விடும் என்று கர்நாடக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதேபோல, மற்ற 3 முக்கிய அணைகளிலும் நீர்வரத்து அதிகம் இருப்பதால் அவையும் விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந் நிலையில் கர்நாடகத்தின் ஹாசன், கூர்க் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதனால் அணைகளுக்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்கும்.
அணைகள் நிரம்பும் பட்சத்தில் கர்நாடக அரசே விரும்பாவிட்டாலும் நீர் தமிழகத்துக்கு வந்து தான் ஆகும்.
இதற்கிடையே, மேட்டூர் அணைக்கும் நீர் வரத்து கணிசமாக அதிகரித்து வருகிறது. அணையில் தற்போது 39 அடி நீர் இருப்பு உள்ளது. தமிழகத்தில் பெய்து வரும் மழை காரணமாக அணைக்கு விநாடிக்கு சுமார் 4,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications