ஓ.பி, பொன்னையன் நாளை பெங்களூர் விரைவு
சென்னை:
பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான உயர் மட்டக் குழு நாளை பெங்களூர் சென்று கர்நாடக முதல்வர் தரம்சிங்கை சந்தித்து காவிரியில் உடனடியாக தண்ணீர் திறந்து விடுமாறு கோரிக்கை விடுக்கவுள்ளது.
கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தையே நடத்த மாட்டோம் என்று கடந்த மூன்று ஆண்டுகளாக முதல்வர் ஜெயலலிதா தவிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 3 வருடங்களுக்குப் பிறகு இப்போது தான் முதன்முறையாக கர்நாடகத்துக்கு குழுவை அனுப்புகிறார் ஜெயலலிதா.
காவிரி பாசனப் பகுதி விவசாயிகளின் குறுவை சாகுபடிக்கு போதிய நீர் மேட்டூர் அணையில் இல்லை. இதனால் அணை தொடர்ந்து 4-வது ஆண்டாக இந்த முறையும் திறக்கப்படவில்லை.
இந் நிலையில், தமிழக அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழு டெல்லியில் பிரதமரைச் சந்தித்து கோரிக்கை விடுத்தது. அதேபோல், ஜனநாயக முன்னேற்றக் கூட்டணி பிரதிநிதிகள் கர்நாடக முதல்வர் தரம்சிங்கை பெங்களூரில் சந்தித்துக் கோரிக்கை விடுத்தார்கள்.
இருப்பினும் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது என்று தரம்சிங் திட்டவட்டமாக அறிவித்து விட்டார். நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் தமிழகத்துக்கு ஜூன் மாதத்தில் தண்ணீர் விடுவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது.
இதைடுத்து தமிழக அரசு உயர் மட்டக் குழுவை கர்நாடகத்திற்கு அனுப்பி வைக்கிறது. பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான இந்தக் குழு புதன்கிழமை பெங்களூர் சென்று தரம்சிங்கை சந்திக்கிறது.
இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில்,
உயர் மட்டக் குழுவில் நிதியமைச்சர் சி.பொன்னையன், சுகாதாரத் துறை அமைச்சர் தளவாய் சுந்தரம், தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் (இவர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர், இவரது கணவர் கர்நாடக தலைமைச் செயலாளராக இருந்தவர்) பொதுப் பணித்துறைச் செயலாளர் பழனியப்பன், காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் மோகன கிருஷ்ணன் ஆகியோர் இடம் பெறுவார்கள் என்று ஜெயலதா கூறியுள்ளார்.
இந்தக் குழுவினரை சந்திக்க தரம்சிங் நேரம் ஒதுக்கித் தந்துள்ளார்.
-
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி












Click it and Unblock the Notifications