பழனி: பஞ்சலோக முருகன் சிலையை ஆய்வு செய்த அமைச்சர்
பழனி:
பழனி முருகன் கோவில் பஞ்சலோக சிலையை பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆய்வு செய்தார்.
பழனி முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் போக முனிவரால் உருவாக்கப்பட்ட உற்சவமூர்த்திக்குப் பதிலாக பஞ்சலோக அபிஷேக மூர்த்தி சிலையை தமிழக அரசு வைத்தது.
இந்த புதிய சிலை, பழைய சிலையை மறைத்தது. இதற்கு பக்தர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சமீபத்திய தேர்தல் தோல்விக்கும் இந்த சிலை வைக்கப்பட்டதற்கும் ஜோதிடர்கள் முடிச்சு போட்டு காரணம் சொன்னதையடுத்து புதிய சிலையை அகற்ற முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இதையடுத்து படு ரகசியமாக பூஜைகள் நடத்தப்பட்டு சிலை அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட பஞ்சலோக சிலை இப்போது ஒரு அறையில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சிலைய பூட்டி வைப்பதும் தவறானது என்று குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துள்ளன.
இந் நிலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பழனி கோவிலுக்கு திடீரென வருகை தந்தார். சாமி கும்பிட்ட பின்னர், பஞ்சலோக சிலை வைக்கப்பட்டிருந்த அறைக்கு சென்று ஆய்வு செய்தார்.
பஞ்சலோக சிலைக்கு தினமும் பூஜைகள் நடைபெறுகிறதா என்று அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications