உடனே தண்ணீர் திறந்து விடுங்கள்: ஜெ
பெங்களூர்:
தமிழக டெல்டா பகுதி விவசாயிகள் குறுவை நெல் சாகுபடியை மேற்கொள்ள வசதியாக உடனடியாகக் காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக முதல்வர் தரம்சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இந்தக் கடிதத்தை அமைச்சர் பன்னீர்செல்வம் இன்று தரம்சிங்கிடம் வழங்கினார். அக் கடிதத்தில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:
இந்த ஆண்டாவது குறுவை நெல் சாகுபடி செய்துவிடலாம் என்ற நம்பிக்கையில் டெல்டா பகுதி விவசாயிகள் நம்பிக்கையுடன் காத்துக் கொண்டுள்ளனர். அவர்களது துயரமான நிலையை கருத்தில் கொண்டு உடனே நீரைத் திறந்துவிட கர்நாடகம் முன் வர வேண்டும்.
வழக்கமாக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை குறுவை சாகுபடிக்காக திறந்துவிடப்படும். ஆனால், இந்த ஆண்டு தண்ணீரைத் திறக்க முடியாத அளவுக்கு வெறும் 6 அடி தண்ணீர் தான் உள்ளது.
தொடர்ந்து சில ஆண்டுகளாக கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக காவிரிப் பாசன விவசாயிகளுக்கு இப்போது மேட்டூரில் உள்ள நீரை வைத்து எந்த உதவியும் செய்ய முடியாது.
இந்த ஆண்டு காவிரி நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால், எப்படியில் கர்நாடகம் நீர் திறந்துவிடப்படும் என்ற நம்பிக்கையுடன் விவசாயிகள் காத்துக் கொண்டுள்ளனர்.
இதனால் உடனே தண்ணீர் திறந்துவிட ஆவன செய்யுமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதாவின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
கடந்த மூன்றாண்டுகளாக காவிரி விஷயத்தில் கர்நாடகத்துடன் அதிமுக அரசு எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றத் தீர்ப்பின் மூலமே தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கும் என்று அறிவித்த முதல்வர் ஜெயலலிதா வழக்குகளைத் தொடர்ந்தார்.
ஆனால், நீதிமன்ற உத்தரவுகளைக் கூட கர்நாடகம் மதிக்கவில்லை என்பது நினைவுகூறத்தக்கது.
இந் நிலையில் மீண்டும் தனது அமைச்சர்களை ஜெயலலிதா அனுப்பி வைத்துள்ளார்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications