தரம்சிங்குடன் பன்னீர், பொன்னையன் சந்திப்பு
பெங்களூர்:
காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக முதல்வர் தரம்சிங்கை தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான உயர் மட்டக் குழு நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தது.
இன்று பெங்களூரில் விதான செளதாவில் இந்தக் குழு தரம்சிங்கை சந்திதது. இக் குழுவில் நிதியமைச்சர் பொன்னையன், நலத்துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.
குறுவை சாகுபடிக்குத் தேவையான நீரை உடனே திறந்துவிடுமாறு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தை அப்போது தரம்சிங்கிடம் பன்னீர்செல்வம் வழங்கினார்.
நீர் திறந்துவிடக் கோரி கடந்த ஒர் வாரத்தில் கர்நாடக முதல்வரை சந்திக்க தமிழகத்தில் இருந்து வந்த இரண்டாவது குழுவாகும் இது. முதலில் திமுகவின் துரைமுருகன் தலைமையில் அதிமுக-பா.ஜ.க. தவிர்த்த அனைத்துக் கட்சிக் குழு கர்நாடகம் வந்து சென்றது.
இன்றைய சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், சந்திப்பு மிகவும் சுமூகமான சூழலில் நடந்தது. எங்களது கோரிக்கையை பரிசீலிப்பதாக கர்நாடக அரசு உறுதியளித்தது என்றார்.
ஆனால், கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே இதனை மறுத்தார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில், இப்போதைக்கு தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட வாய்ப்பே இல்லை. எங்களது நிலையில் எந்த மாற்றமும் இல்லை. இந்த விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் அரசு அறிக்கை தாக்கல் செய்யும் என்றார்.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications