ஜெவுடன் தமிழக பா.ஜ.க. தலைவர் சந்திப்பு
சென்னை:
அதிமுகவுடனான உறவை பாஜக முறித்துக் கொள்ளவில்லை என்று தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசிய ராதாகிருஷ்ணன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்தேன்.
அதிமுகவுடன் நாங்கள் உறவை முறித்துக் கொள்ளவில்லை. எந்தக் கட்சியுடனும் நாங்களாகவே உறவை முறித்துப் பழக்கமில்லை. அந்த வகையில் அதிமுகவுடனான உறவும் நீடிக்கிறது.
தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலில் வாக்குப் பதிவு நடந்தால், அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாஜக வாக்களிக்கும்.
தமிழகத்திற்குக் காவிரி நீரைப் பெற்றுத் தர வேண்டிய மிகப் பெரிய கடமை 40 எம்.பிக்களை கையில் வைத்துக் கொண்டுள்ள திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு உண்டு.
அப்படிப் பெற்றுத் தரத் தவறினால் திமுகவும், காங்கிரஸும் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் அவர்.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications