தமிழகத்துக்கு நீர் விட பிரதமர் உத்தரவு?
டெல்லி:
காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக முதல்வர் தரம்சிங்கிடம் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.
காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க மத்திய அமைச்சரைவின் அரசியல் விவகாரங்களுக்கான குழுக் கூட்டத்தை மன்மோகன் சிங் இன்று கூட்டினார்.
பிரதமரின் அலுவலகத்தில் மன்மோகன் சிங் தலைமையில் மனிதவளத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், நிதியமைச்சர் ப.சிதம்பரம், ரயில்வேத்துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் கொண்ட குழு கூடி விவாதித்தது.
45 நிமிடங்கள் நடந்த இக் கூட்டத்தில் தமிழக, கர்நாடக அணைகளைப் பார்வையிட்ட மத்திய நிபுணர் குழு வழங்கியுள்ள அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.
கர்நாடக அணைகளில் நீர் இருப்பதாலும், பருவ மழை பெய்து வருவதாலும் தமிழகத்துக்கு மனிதாபிமான அடிப்படையில் உடனே தண்ணீர் திறந்துவிடலாம் என்று அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்துக்கு நீர் கிடைக்கச் செய்யுமாறு பிரதமருக்கு திமுக தலைவர் கருணாநிதி எழுதிய கடிதமும் இக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதையடுத்து நீர் திறந்துவிடுமாறு கர்நாடகத்துடன் பிரதமர் பேசுவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டம் முடிந்தவுடன், கர்நாடக முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டார் பிரதமர். அப்போது தமிழகத்துக்குத் தண்ணீரைத் திறந்துவிடுமாறு கோரியதாகத் தெரிகிறது.
நேற்றும் தரம்சிங்கிடம் மன்மோகன் சிங் தொலைபேசியில் இதே கோரிக்கையை முன் வைத்ததும் அதை தரம்சிங் நிராகரித்ததும் குறிப்பிடத்தக்கது.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications