மண்ணுக்குள் தவம்: சாமியாரை காத்த போலீஸ்
கடலூர்:
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே குழிக்குள் இறங்கி தவம் இருக்க முயன்ற சாமியாரை போலீஸார் கைது செய்தனர்.
சமீபத்தில், மதுரை அருகே வாடிப்பட்டியில் குழிக்குள் 48 மணி நேரம் தவம் இருந்த சாமியார் மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் வடலூர் அருகே உள்ள ஆபத்தானந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சாமியார் 12 மணி நேரம் குழிக்குள் தவம் இருக்கப் போவதாக அறிவித்தார். இதனால் வடலூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தக் கிராமத்தில் நாக கன்னிகை கோவிலை வெங்கடாசலபதி என்ற சாமியார் நிறுவியுள்ளார். இக் கோவிலுக்கு இன்று மாலை குடமுழுக்கு நடத்தவும் திட்டமிட்டிருந்தார். இதற்கு முன்பாக நேற்று மாலை கோவிலுக்கு அருகே வெட்டப்பட்ட குழிக்குள் இறங்கி 12 மணி நேரம் தவம் இருக்க சாமியார் திட்டமிட்டிருந்தார்.
குழிக்குள் தான் இறங்கிய பின்னர் காற்றுக் கூட புக முடியாத அளவுக்கு குழியை மண் போட்டு மூடி விட வேண்டும் என்று அவர் தனது சிஷ்யர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். இத் தகவல் அறிந்ததும் போலீஸார் அங்கு விரைந்து வந்தனர்.
வாடிப்பட்டி சாமியாரின் கதி வடலூர் சாமியாருக்கு ஏற்படாமல் தடுக்க அவரைக் கைது செய்தனர்.
பின்னர் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்ட சாமியார், தான் குழிக்குள் இறங்க மாட்டேன் என உறுதிமொழி கொடுத்த பின் விடுவிக்கப்பட்டார்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்!












Click it and Unblock the Notifications