அமாவாசை பீதி: வெறிச்சோடிய கிராமம்!
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பூவலம்பேடு கிராமத்தில், அமாவாசை தினத்தன்று (இன்று) ஒரு குழந்தையும், தாயும் மரணமடைவார்கள் என்று வதந்தி கிளப்பப்பட்டதால் ஊரில் உள்ள அத்தனை பேரும் கிராமத்தைக் காலி செய்து விட்டுச் சென்று விட்டனர். இதனால் ஊரே வெறிச்சோடிக் கிடக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ளது பூவலம்பேடு கிராமம். சுமார் 2,000 பேர் வசிக்கும் இந்தக் கிராமத்தில் கடந்த 6 மாதத்தில் 16 பேர் பல்வேறு நோய்கள் தாக்கி பலியாகியுள்ளனர்.
இந் நிலையில் அந்த ஊரில் அருள் வாக்கு சொல்லும் பெண்மணி, ஊரில் கடவுள் குற்றம் நிகழ்ந்துவிட்டதாகவும், வரும் அமாவாசை (அதாவது இன்று) தினத்தன்று கிராமத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையும், அதன் தாயும் மரணமடைவார்கள் என்று கூறியுள்ளார்.
இதனால் கிராமமே பெரும் பீதியடைந்துவிட்டது. இதையடுத்து மக்கள் அனைவரும் தங்களது வீடுகளைப் பூட்டி விட்டு பிற ஊர்களில் உள்ள தங்களது உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்த அருள் வாக்கை நம்பாத 3, 4 பேர் மட்டுமே கிராமத்தை சுற்றி வந்தவண்ணம் உள்ளனர். இவர்கள் டீ குடிக்கக் கடை இல்லை. டீக் கடைகளையும் பூட்டிவிட்டுச் சென்றனர்.
மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வராததால், கிராமத்தில் உள்ள பள்ளிக் கூடமும் இன்று மூடப்பட்டுவிட்டது. கிராமமே வெறிச்சோடிக் காணப்படுகிறது.
அமாவாசை முடிந்த பின்னர் நாளைதான் மக்கள் கிராமத்திற்கு திரும்புவார்கள் என்று தெரிகிறது
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications