கிரிக்கெட் அணி பயிற்சி சென்னைக்கு மாற்றம்
சென்னை:
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் பயிற்சி முகாம் பெங்களூரில் இருந்து சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் அடுத்த மாதம் 16ம் தேதி முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.
இதில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் உடல்தகுதி பயிற்சி முகாம் பெங்களூரில் கடந்த 13ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்தப் பயிற்சி முகாம் நாளை முடிவடைகிறது.
இதனையடுத்து இறுதி கட்ட பயிற்சி முகாம் பெங்களூரில் அடுத்த மாதம் 3ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது இந்தப் பயற்சி முகாம் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜக்மோகன் டால்மியா கூறுகையில்,
இலங்கையை ஒத்த தட்ப வெப்பநிலை சென்னையில் நிலவும் என்பதால் பயிற்சி முகாம் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. ஜூலை 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை இந்த பயிற்சி முகாமின் போது இந்திய அணி தேர்வு செய்யப்படும் என்றார்.
இதற்கிடையே ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பு செய்யும் உரிமையை இ.எஸ்.பி.என். தொலைக்காட்சி பெற்றுள்ளது.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications