ஜெயலலிதா மீதான வழக்கு விசாரணைக்கு தடை
சென்னை:
சோனியா குறித்து கடுமையாக விமர்சனம் செய்த முதல்வர் ஜெயலலிதா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர அனுமதி கோரி திருச்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சமீபத்திய மக்களவைத் தேர்தலின்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளிநாட்டுக்காரர் என்று கூறி ஜெயலலிதா விமர்சித்தார்.
இந்தியக் குடியுரிமை பெற்றுவிட்ட சோனியா இந்தியர் தான் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் ஜெயலலிதா இவ்வாறு விமர்சித்தது நீதிமன்ற அவமதிப்பாகும் என்று கூறி திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ஜெயலலிதா மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இதையடுத்து திருச்சி நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார். அதில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக நான் ஏதும பேசவில்லை. தேசப்பற்று மிக்க குடிமகள் என்ற முறையில் தான் சோனியா பிரதமராகக் கூடாது என்று பேசினேன்.
ஒரு முதல்வர் மீது உச்ச நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர முன்சீப் (திருச்சி) நீதிமன்றம் போன்ற கீழ் நிலை நீதிமன்றங்களிடம் அனுமதி பெறலாம் என்று அரசியல் சட்டத்தில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை.
இதனால் திருச்சி நீதிமன்றத்தில் நடக்கும் அந்த மனு மீதான விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதனை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி பாலசுப்பிரமணியம், திருச்சி நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தார்.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications