விக்கெட் கீப்பராக பார்த்தீவ் படேல்: டிராவிட் விருப்பம்
பெங்களூர்:
ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கும் விக்கெட் கீப்பராக பார்த்தீவ் படேலை ஆட வைக்கலாம் என்று இந்திய அணியின் துணைக் கேப்டன் ராகுல் டிராவிட் கூறினார்.
கடந்த வருடம் இந்திய அணியில் பேட்ஸ்மேன்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதத்தில் விக்கெட் கீப்பிங் பொறுப்பு டிராவிட்டிடம் தரப்பட்டது. இதனால் இந்திய அணியில் பேட்டிங் வரிசை பலப்பட்டது. அதே நேரத்தில் டிராவிட் இதை விரும்பவில்லை என்றும், அதிகம் களைப்படைந்து விடுவதாகவும் கூறப்பட்டது.
இந் நிலையில் இதை உறுதிப்படுத்தும் விதமாக டிராவிட் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
நான் இயல்பான விக்கெட் கீப்பர் இல்லை. இருப்பினும் அணியின் தேவையைக் கருத்தில் கொண்டு கொடுத்த பொறுப்பை ஏற்று சிறப்பாக ஆட முயற்சிக்கிறேன். டெஸ்ட் போட்டிகளில் பார்த்தீவ் படேலின் விக்கெட் கீப்பிங் நன்றாக உள்ளது. அவரையே ஒரு நாள் போட்டிக்கும் விக்கெட் கீப்பராக ஆட வைக்கலாம் என்று கூறினார்.
ஆனால். டிராவிட் விக்கெட் கீப்பராக பணியாற்றுவது அணிக்கு நல்ல பலனளிப்பதாக கங்குலி கூறிவருவது குறிப்பிடத்தக்கது.
பியூட்டி பார்லர் ஆரம்பிக்கிறார் ஹர்பஜன்:
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கிரிக்கெட் தவிர்த்து துணைத் தொழிலாக வேறெதாவது ஒன்றிலும் கவனம் செலுத்தி வருகிறார்கள். சச்சின் மும்பையில் ரெஸ்டாரென்ட் நடத்தி வருகிறார். அவரைப் பின்பற்றி கங்குலி கொல்கத்தாவில் ஹோட்டல் தொடங்க உள்ளார்.
அதே போல் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் சண்டிகாரில் நவீன பியூட்டி பார்லர் ஒன்றைத் தொடங்க உள்ளார். கங்குலி இதை திறந்து வைக்கிறார். யுவராஜ் சிங், நெஹ்ரா ஆகியோர் திறப்பு விழாவில் பங்கேற்கிறார்கள்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications