ராமதாசுக்கு வினியோகஸ்தர்கள் க-டும் எதிர்ப்பு
சென்னை:
ரஜினியைத் தொடர்ந்து இப்போது விஜயகாந்த் படங்களைத் தடை செய்வோம் என்று பாமகவினர் கூறி வருவதற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சங்கத் தலைவர் அருள்பதி, செயலாளர் கலைப்புலி சேகரன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை:
பாமகவினர் எங்கள் ஜீவனத் தொழிலை தங்களின் மோதல் களமாக தேர்ந்தெடுத்திருப்பது பெரும் வருத்தம் தருகிறது.
ரஜினிகாந்த்துடன் நடந்த மோதல்களுக்குப் பின் ஏற்பட்ட வருந்தக்கூடிய செயல்கள், விஜயகாந்த்துடன் ஏற்பட்ட பிரச்சினைக்குப் பின்னும் தொடருகிறது.
எந்த நடிகரும் ராமதாஸுக்கு எதிரான நிலையை எடுத்தால், உடனே அந்த நடிகர் நடித்த படங்களை நிறுத்துவது, தியேட்டரில் கல்லடிப்பது போன்ற வேதனை தரும் செயல்களால் வினியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் பெரும் நஷ்டம் ஏற்படுவதை பாமகவினர் உணர வேண்டும்.
பொதுமக்களையும், தொழில்களையும், வியாபாரங்களையும், தாய் தந்தை நிலையில்இருந்து காக்க வேண்டிய அரசியல்வாதிகள், தங்களது ஆதரவாளர்களை திரைப்பட வியாபாரத்துறைக்கு எதிராக தூண்டி விடுவது எந்த விதத்தில் நியாயம்?
படத்தை திரையிட விட மாட்டோம் என்று பணிய வைக்க முயல்வது வெற்றி ஆகாது. ஒரு திரைப்படத்தின் பின்னே, எத்தனையோ தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிக, நடிகையர், வாகன ஓட்டுநர்கள் என 24 வகையான ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்,
வட்டிக்கு வாங்கி படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், பெட்டிகளை எடுப்போர், படப் பிரதிநிதிகள், போஸ்டர் ஒட்டுபவர் என லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர்.
எனவே படத்தை வெளியிட விட மாட்டோம் என்று கூறுவதன் மூலம் பாமக மீது மக்களிடையே செல்வாக்கு மங்குகிறது என்பதை உணர்ந்து, எங்கள் வாழ்க்கைக்கு இடர் விளைவிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டு எந்த நடிகர் நடித்து வெளி வரும் படத்தையும் அரசியலாக்க வேண்டாம் என ராமதாசுக்குக் கோரிக்கை விடுக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
மன்னிப்பு கேட்க வேண்டும் விஜய்காந்த்:
இந் நிலையில், விஜயகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவரது படங்களை ஓட விட மாட்டோம் என இந்த மாவட்ட பாமகவினர் அறிவித்துள்ளனர்.
-
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications