தற்காலிக ஊழியர்களுக்கு கருணாநிதி ஆதரவு
சென்னை:
அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது, ஓடோடி வந்து உதவிக் கரம் நீட்டிய தற்காலிக ஊழியர்களுக்கு மீண்டும் அரசு வேலை கொடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது, இந்த 16,000 பேரும் ஓடோடி வந்து அரசுக்கு உதவிக் கரம் நீட்டினார்கள்.
வேலை தேடி அலைந்த இந்த 16,000 பேரும், அறப்போரில் ஈடுபட்டிருந்த (வேலை நிறுத்தம்) அரசு ஊழியர்களுக்கு தங்களை அறியாமல் துரோகம் செய்கிறோம் என்று நினைக்காமல், அப்படியே நினைத்தாலும் தங்களது குடும்பத்துயர் முந்திக் கொண்டு வேலையை ஏற்றுக் கொள்ளத் தூண்டியதால் வேறு வழியின்றி வேலைகளில் சேர்ந்தார்கள்.
ஏமாறப் போகிறீர்கள் என்று எடுத்துச் சொன்னவர்களை ஒதுக்கிவிட்டு வேலையை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், 10 மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் அவர்களது மகிழ்ச்சி, குறைப் பிரசவமாகிவிட்ட காட்சியைக் காணுகிறோம்.
அரசுப் பணிக்கு ஆட்களைச் சேர்க்க சர்வீஸ் கமிஷன் மூலமாகத் தான் தேர்வு நடத்தி தேர்ந்தெடுக்க வேண்டும். டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியில் அமர்த்தச் சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டால், தாற்காலிகப் பணியாளர்களின் நிலை என்னவாகும்? இதை நான் அப்போதே எழுதினேன். நான் எழுதியது அப்படியே நடந்துவிட்டது.
இன்று இந்த தாற்காலிக ஊழியர்கள் படும் வேதனை கண்டு அரசு ஊழியர்கள் நிச்சயமாக அக மகிழவில்லை. மாறாக, இவர்களை இப்படி ஏமாற்றி வீட்டுக்கு அனுப்புவது நியாயமில்லை என்றே ஊழியர் அமைப்புகள் நினைக்கின்றன.
தேவையேற்பட்டபோது குறைந்த ஊதியத்துக்காக ஓடோடி வந்து உதவிக் கரம் நீட்டிய இந்த ஊழியர்களின் கரங்களைத் துண்டித்துவிடாமல், நன்றியுணர்வோடு நடந்து அவர்களுக்கு வாழ்வளிக்குமாறு இந்த அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
இனிமேலாவது, தொழிலாளர்களின் உரிமைகளைப் புரிந்து கொண்டு அவர்களது வாழ்க்கைக்கு குறுக்கே வர தொழிலாளர்களே நினைக்கக் கூடாது. தொழிலாளர்களின் உரிமையை மதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications