சென்னையில் வைகோ: பாஸ்போர்ட் ஒப்படைப்பு
சென்னை:
மத்திய அமைச்சரவையில் சேருவதற்கான வாய்ப்பே இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இருந்து இன்று அதிகாலை தனது மனைவியுடன் சென்னை திரும்பினார் வைகோ. அவருக்கு மதிமுக தொண்டர்கள் விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில், கடந்த முறை அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தபோது இங்கே போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர், என்னைக் கைது செய்ய. இப்போதும் குவிந்திருக்கிறார்கள், ஆனால் எனக்கு பாதுகாப்பு அளிக்க.
மத்திய அமைச்சரவையில் மதிமுக சேரும் வாய்ப்பு இருப்பதாக எங்கள் கட்சியின் அவைத் தலைவர் எல்.கணேசன் கூறியிருப்பதாக ஒரு பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.
கணேசன் அப்படிப் பேசியிருக்க மாட்டார். அவர் என்ன பேசினார் என்பதை கேட்காமல் அதுகுறித்துக் கருத்துக் கூற முடியாது. ஆனால், அமைச்சரவையில் சேருவதில்லை என்பது கட்சியின் ஒருமித்த முடிவு. அதில் மாற்றமே இல்லை, நிச்சயம் அமைச்சரவையில் சேர மாட்டோம்.
கர்நாடகத்திலிருந்து காவிரியில் தண்ணீர் விடப்பட்டது மகிழ்ச்சி தருகிறது. இது கருணாநிதி தலைமையிலான கூட்டணிக்குக் கிடைத்த வெற்றி. அதே போல காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பையும் கர்நாடகம் அமலாக்க வேண்டும்.
தாற்காலிக அரசு ஊழியர்கள் 16,000 பேர் இரவோடு இரவாக நீக்கப்பட்டது கடும் கண்டனத்துக்குரியது. பொடா விரைவில் வாபசாகும். மத்திய அரசு அதற்கான வேலைகளைச் செய்து வருவதால், அது குறித்து அதிகம் பேச விரும்பவில்லை என்றார் வைகோ.
பொடா சட்டத்தின் கீழ் கைதாகி பின்னர் ஜாமீனில் விடுதலையான பிறகு வைகோ மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை மதிமுகவின் உயர் மட்டக் குழுக் கூட்டம் வைகோ தலைமையில் நடந்தது. நடக்கிறது. இதில் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்தும், ஜூலை 17ம் தேதி நெல்லையில் நடைபெறவுள்ள பொதுக்குழுக் கூட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும் மத்திய அமைச்சரவையில் சேர வேண்டும் என்று மூத்த தலைவர்கள் பேசி வருவது குறித்தும் காரசாரமாக விவாதிக்கப்பட்டது.
பாஸ்போர்ட் ஒப்படைப்பு:
இந் நிலையில் தனது பாஸ்போர்ட்டை வைகோ இன்று பொடா நீதிமன்றத்தில் சமர்பித்தார்.
பொடா சட்டத்தில் கைதாகி ஜாமீனில் இருக்கும் அவர், உயர் நீதிமன்ற அனுமதியுடன் தான் அமெரிக்கா சென்றார். இன்று காலை திரும்பி வந்த அவர், தனது வழக்கறிஞர் மூலம் பொடா நீதிமன்ற நீதிபதி ராஜேந்திரனிடம் பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார்.
எம்.பியாக இருந்த வைகோவிடம் டிப்ளமாட்டிக் பாஸ்போர்ட் உள்ளது.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications