கேபிஎன் பஸ் - லாரி மோதல்: 6 பேர் பலி
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் அருகே இன்று காலை ஒரு லாரியுடன் ஆம்னி பஸ் ஒன்று நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் பலியாகினர். 25 பேர் காயமடைந்தனர். கே.பி.என். நிறுவனத்துக்குச் சொந்தமான ஆம்னி பஸ் 27 பயணிகளுடன் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டு கோட்டை, தென்னலூர் தமிழ்நாடு மின்வாரிய அலுவலகம் பகுதிக்கு வந்தபோது எதிரே வந்த சரக்கு லாரியுடன் நேருக்கு நேர் மோதியது.
இந்த மோதலில் லாரியின் டீஸல் டேங்க் வெடித்து தீப்பிடித்தது. அந்த தீ பஸ்சிலும் பரவி, ஒரே சமயத்தில் பஸ்சும் லாரியும் கொழுந்து விட்டு எரிந்தன.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உடல் கருகி பலியானார்கள்.
1. சுங்குவார் சத்திரம் திருமங்கலத்தைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் (வயது 50), லாரி டிரைவர்.
2. பஸ் டிரைவர் (பெயர் தெரியவில்லை),
3. சென்னை மயிலாப்பூர், முண்டக்கன்னி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த லலிதா (65). இவர் பஸ்சில் பிரயாணம் செய்தவர்.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பஸ்சின் மாற்று டிரைவர், லாரி கிளீனர், பயணிகள் உள்பட 25 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு, அவர்கள் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவ்வாறு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 3 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிர் இழந்தனர்.
1. கார்த்திக் (லாரி கிளீனர்),
2. மணி (பஸ் கண்டக்டர்),
3. ஜோதிலிங்கம் (லாரி லோடுமேன்).
மேலும் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்து காரணமாக அந்த சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்தை நேரில் பார்த்த சத்யராஜ்:
இந்த விபத்தை நடிகர் சத்யராஜ் நேரில் பார்த்திருக்கிறார். இன்று காலை ஸ்ரீபெரும்புதூரில் அழகேசன் படப்பிடிப்புக்காக நடிகை பிரேமா, டைரக்டர் ஆர்த்தி குமார், தயாரிப்பாளர் அவினாஷ், டான்ஸ் மாஸ்டர் ஜான்பாபு ஆகியோருடன் சத்யராஜ் சென்னையிலிருந்து காரில் சென்று கொண்டிருந்தார்.
விபத்துக்குள்ளான லாரியின் பின்னால் சத்யராஜின் கார் சென்றதால், இந்த விபத்தை சத்யராஜும் படக்குழுவினரும் நேரில் பார்த்து அதிர்ந்தனர். உடனடியாக விபத்து குறித்து போலீசுக்குத் தகவல் கொடுத்தனர்.
-
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications