கட்டண உயர்வுக்கு அரசு தடை: திணறும் பஸ்கள்
சென்னை:
டீசல் விலை உயர்வு காரணமாக டிக்கெட் விலையை உயர்த்த வேண்டிய கட்டயாயத்துக்கு தமிழக போக்குவரத்துக் கழகங்கள் தள்ளப்பட்டுள்ளன.
ஆனால், மக்களவைத் தேர்தல் தோல்வியயைடுத்து ஏற்கனவே உயர்த்தப்பட்ட மின் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களைக் குறைத்து வரும் தமிழக அரசு, பஸ் கட்டண உயர்வுக்கு அனுமதி தரவில்லை.
பஸ் கட்டணம் உயர்த்தப்படாது என போக்குவரத்துத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.
மேலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ்களை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது அரசு. இதனால் போக்குவரத்துக் கழகங்கள் கடந்த சில வாரங்களாக நாளொன்றுக்கு ரூ. 2.5 லட்சம் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.
மாதத்துக்கு ரூ. 75 லட்சம் பணப் பற்றாக்குறையை போக்குவரத்துக் கழகங்கள் சந்திக்கவுள்ளன.
இந்த நிதி நெருக்கடியை சமாளிக்க பஸ் போக்குவரத்துக் கழங்கள் மற்ற செலவுகளைக் குறைத்து வருகின்றன. குறிப்பாக புதிய பஸ்கள் வாங்கும் திட்டத்தை அவை ஒத்தி வைத்துவிட்டன. இதனால் புதிய ரூட்களுக்கு பஸ் வழித் தடங்கள் தொடங்குவது காலவரையின்றி ஒத்தி வைக்கப்படும்.
அதே போல பஸ்களைப் பராமரிக்க ஆகும் செலவுகளையும் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
டயர்களை மாற்றுவது, பழைய பார்ட்ஸ்களை மாற்றுவது போன்றவற்றை மிக, மிக அத்தியாவசியம் ஏற்பட்டால் மட்டுமே செய்வது என்ற நிலைக்கு போக்குவரத்துக் கழகங்கள் தள்ளப்பட்டுள்ளன.
அதே போல பெயிண்டிங் வேலைகளையும் சிக்கனமாக செய்து முடிக்கவும் திட்டமிட்டுள்ளன. இதனால், பஸ்கள் கயலான் கடை பெட்டிகளாக மாறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தாற்காலிக ஊழியர்களான மெக்கானிக்குகள் போன்றவர்களை நீக்கிவிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
டிக்கெட் விலையை உயர்த்த அரசு அனுமதிக்காவிட்டால், போக்குவரத்துக் கழகங்களின் நஷ்டத்தை அரசே ஈடு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நிலைமையை சமாளிப்பது படு கஷ்டம் என்கின்றனர் அதிகாரிகள் கூறுகின்றனர்.
-
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications