வளைகுடா இந்தியர்களுக்கு உதவ புதிய திட்டம்
திருவனந்தபுரம்:
அரபு நாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு உதவும் வகையில் அங்குள்ள இந்தியத் தூதரகங்களில் தொலைபேசி இணைப்புடன் கூடிய உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இதுதொடர்பாக வெளியுறவுத் துறை இணையமைச்சர் அஹ்மத் நிருபர்களிடம் கூறியதாவது:
அரபு நாடுகளில் வாழும் இந்தியர்கள் வருடத்துக்கு 7 பில்லியன் டாலர் அளவுக்கு அந்நிய செலவாணியை ஈட்டித் தருகிறார்கள். நாட்டின் பொருளாதாரத்தில் அவர்களின் பங்கை மத்திய அரசு நன்றாகவே உணர்ந்துள்ளது. அரபு நாடுகளில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்க்கும் கடமை மத்திய அரசுக்கு உள்ளது.
இதற்கு முதல் படியாக 24 மணி நேரமும் இயங்கும் தொலைபேசி வசதியுடன் கூடிய உதவி மையங்களை இந்தியத் தூதரகங்களில் அமைக்க உள்ளோம். அந்த மையங்களில் தமிழ், ஹிந்தி, உருது மற்றும் மலையாளம் தெரிந்த அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். இவர்களைத் தொடர்பு கொண்டு தங்களது பிரச்சனைகளை இந்தியர்கள் தெரிவிக்கலாம்.
மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது வியாழக்கிழமையும் நேர்காணல் கூட்டங்கள் நடத்தப்படும். இதில் கலந்து கொண்டும் இந்தியர்கள் தங்களது பிரச்சனைகளைத் தெரிவிக்கலாம்.
வெளிநாடுகளில் இறக்கும் இந்தியர்களுக்கான இறப்புச் சான்றிதழை வழங்குவதற்கான கட்டணம் விலக்கிக் கொள்ளப்படும். இக் கட்டணத்தை இறந்தவருக்கு வேலை கொடுத்த நிறுவனம்தான் வழங்க வேண்டும். ஆனால், நடைமுறையில் இறந்தவரின் உறவினர்கள் தான் இதை செலுத்தி வருகின்றனர். எனவே இக் கட்டண முறை விலக்கப்படும என்றார்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications