ராமதாஸூக்கு ஆர்.எம்.வீரப்பன் கடும் கண்டனம்
சென்னை:
திரைப்படத் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் நடந்து கொள்வதாக முன்னாள் அமைச்சரும், எம்.ஜி.ஆர். கழக பொதுச் செயலாளருமான ஆர்.எம்.வீரப்பன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் ரசிகர்கள் மீது பாமகவினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் பின்னணியில் ஆர்.எம்.வீரப்பன் விடுத்துள்ள அறிக்கை:
ஆமக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடிகர் விஜயகாந்த் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இதற்கு திமுக தலைவர் கருணாநிதி, தனக்கே உரிய நயத்துடன் பதிலையும்,யாரையும் குறிப்பிடாமல், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல நாகரிகமாக குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் ராமதாஸோ, தங்கள் கட்சியைப் பற்றிச் சொன்ன கருத்தாக எடுத்துக் கொண்டு நண்பர் விஜயகாந்த்தை விமர்சித்து பதில் தெரிவித்ததை ஒட்டி தேவையற்ற, யாரும் விரும்பத்தகாத –நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
விஜயகாந்த் நடிகராக இருப்பதால், அவருக்கு இடையூறு விளைவிப்பதாக எண்ணிக் கொண்டு திரைப்படத் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், உணர்ச்சிகளைத் தூண்டும் செயல்கள் நடைபெற்று வருகின்றன.
இப்படிப்பட்ட செயல்கள் செத்து செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் திரைப்படத் தொழிலில் ஈடுபட்டிருப்போரை கவலைப்பட வைத்திருக்கிறது. அமைதிக் குலைவும் ஏற்பட இடமளித்துள்ளது.
அரசியல் நிகழ்வுகளை, அரசியல்வாதிகளின் செயல்களை பற்றி கருத்து சொல்வதற்கும், விமர்சிப்பதற்கும் அனைவருக்கும் உரிமை உண்டு. அந்த அடிப்படையில்தான் விஜயகாந்த் விமர்சனத்தையும் எடுத்துக் கொண்டு தக்க பதிலை அரசியல் தலைவர்கள் அளிக்க வேண்டுமே தவிர அவர்களின் தொழிலுக்கு பாதகம் விளைவிக்க –நினைப்பது முறையல்ல, நியாயமல்ல என்று காட்டமாக கூறியுள்ளார்.
ஆர்.எம்.வீரப்பன் ஒரு காலத்தில் ரஜினிகாந்த்துக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார். பின்னர் ரஜினியிடமிருந்து விலகி விட்டார். ரஜினிகாந்த்தின் பாபா படத்திற்கு பாமகவினர் கொடுத்த பிரச்சினைகளின்போது ரஜினிக்கு ஆதரவாக ஆர்.எம்.வீரப்பன் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது இங்கு –நினைவு கூறத்தக்கது.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்!












Click it and Unblock the Notifications