மயங்கி விழுந்த பெண் ஊழியர்கள்: எங்கும் கண்ணீர்
சென்னை:
திடீரென வேலை பறிபோனதை அறிந்த தாற்காலிக அரசு ஊழியர்களில் சில பெண்கள் மயங்கி விழுந்தனர். பலர் கதறி அழுதனர். ஆண் ஊழியர்களும் கண் கலங்கியபடி நின்றிருந்தனர்.
இதனால் சென்னை தலைமைச் செயலகம் உள்பட மாநிலத்தின் பல்வேறு அரசு அலுவலகங்களும் சோகத்தில் மூழ்கின.
நேற்று முன் தினம் இரவு போடப்பட்ட ஒரே உத்தரவில் 16,000 ஊழியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுவிட்டனர். இவர்களில் பலர் இந்தச் செய்தியை அறிந்திருக்கவே இல்லை.
அலுவலகங்களுக்கு வந்த பின்னர் தான் பணி நீக்கம் செய்யப்பட்டதை உணர்ந்தனர். இதில் பெண்கள் கதறி அழுதனர். சில பெண்கள் மயங்கி விழுந்தனர்.
ஆண்கள் கண் கலங்கியபடி நின்றிருந்தனர்.
மிகவும் ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த இந்தப் பெண்களில் பெரும்பாலானவர்கள் 35 வயதைக் கடந்தவர்கள்.
வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வைத்து பல்லாண்டுகளுக்குப் பின் வயது மூப்பு அடிப்படையில் தான் இவர்களுக்கு தாற்காலிக அரசு ஊழியர் வேலை கிடைத்தது.
எப்படியாவது முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து முறையிட்டுவிடலாம் என கோட்டையில் இந்த ஊழியர்கள் காலை முதல் காத்திருந்தனர். ஆனால், அவர்களை மாலை வரை ஜெயலலிதா சந்திக்கவில்லை.
இதையடுத்து தங்களது கோரிக்கைகளை கண்ணீருடன் எழுதி அதை முதல்வர் அலுவலகத்தில் கதறி அழுதபடி அதிகாரிகளிடம் தந்துவிட்டுச் சென்றனர் இந்த ஊழியர்கள்.
இவர்கள் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷை சந்திக்க முயன்றனர். ஆனால், அவரும் சந்திக்க மறுத்துவிட்டார்.
முதல்வரை சந்திப்பதற்காகக் காத்திருந்த இந்த ஊழியர்கள் பிற்பகலில் உணவுக்காகக் கூட கலைந்து செல்லவில்லை. கோட்டை மரத்தடிகளிலேயே அமர்ந்திருந்தனர்.
இதில் சில பெண்கள், எங்கள் பிள்ளைகளை இப்போது தான் நல்ல பள்ளிகளில் சேர்த்தோம், வளரும் வயதில் நன்றாக சாப்பிடும் நிலையில் இருக்கும் எங்கள் பிள்ளைகளுக்கு எங்கள் ஊதியம் பெரும் உதவியாக இருந்தது.
இப்போது இந்த ஊதியம் பறிபோனால் என்ன செய்வது என்றே தெரியவில்லை என வீட்டின் நிலைமையை வெளிப்படையாகவே சொல்லி அழுதது கண்களைக் கலங்கச் செய்தது.
பதவி நீக்கம் செய்யப்பட்ட இந்த ஊழியர்களுக்கு கடந்த வாரம் தான் அவர்களது அடையாள அட்டைகளை தமிழக அரசு புதுப்பித்துத் தந்தது குறிப்பிடத்தக்கது.
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications