அரசு மருத்துவ கல்லூரிகளில் நடிக்கும் டாக்டர்கள்
சென்னை:
இந்திய மருத்துவக் கவுன்சிலின் அங்கீகாரத்திற்காக காத்திருக்கும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரிஅரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு, சென்னையிலிருந்து இரவோடு இரவாக 200க்கும் மேற்பட்ட டாக்டர்களைஅனுப்பியதால் தமிழக அரசு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது.
திருநெல்வேலியில் இயங்கி வரும் மருத்துவக் கல்லூரிக்கு இன்னும் இந்திய மருத்துவக் கவுன்சிலின் அங்கீகாரம்கிடைக்கவில்லை. இதுதவிர தூத்துக்குடி, கன்னியாகுமரியில் புதிய மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசுநிர்மாணித்து வருகிறது.
இந்த மூன்று கல்லூரிகளிலும் இந்திய மருத்தவக் கவுன்சிலின் உயர் அதிகாரிகள் சோதனைக்கு வரவுள்ளனர்.ஆனால் மூன்று மருத்துவக் கல்லூரிகளிலும் போதிய டாக்டர்கள் இல்லை. பல பணியிடங்கள் காலியாகவேஉள்ளது. இவற்றை நிரப்ப தமிழக அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந் நிலையில் இந்திய மருத்துவக் கவுன்சில் சோதனை நடைபெறவுள்ளதைத் தொடர்ந்து என்ன செய்வது என்றுயோசித்த மருத்துவக் கல்வி இயக்குநரகம், சென்னை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 200 டாக்டர்களைசம்பந்தப்பட்ட 3 மருத்துக் கல்லூரிகளுக்கும் அனுப்பி அந்த கல்லூரிகளைச் சேர்ந்த டாக்டர்களாக "நடிக்க" வைக்கமுடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து புதன்கிழமை இரவு சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு வெளியே 6 பேருந்துகளில் 200டாக்டர்கள் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவக் கவுன்சில்சோதனை முடியும் வரை இவர்கள் அங்கேயே தங்கி இருப்பார்கள் என கூறப்படுகிறது.
தமிழக சுகாதாரத் துறையின் இந்த நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications