3 மாதமாக வீட்டு சிறையில் இருக்கும் 82 வயது மூதாட்டி
திருச்சி:
திருச்சியில் 82 வயதாகும் ஒரு மூதாட்டியை வீட்டை விட்டு வெளியேற முடியாத அளவுக்கு தடுப்புச் சுவர்கட்டியதால், அந்த பாட்டி கடந்த 3 மாதமாக சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்.
திருச்சி கிராப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது வீட்டுக்கு அருகே இவருக்குச் சொந்தமானகாலியிடம் உள்ளது. இந்த இடத்தை சில மாதங்களுக்கு முன்பு முருகேசன் என்பவர் ஆக்கிரமித்தார். இவர்அதிமுகவைச் சேர்ந்தவர். ஆக்கிரமிப்பு செய்ததோடு, வேலுச்சாமி வீட்டை மறைக்கும் வகையில் தடுப்புச் சுவர்கட்டவும் எத்தனித்துள்ளார் முருகேசன்.
இதுகுறித்து உள்ளூர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் கென்னடியிடம் வேலுச்சாமி புகார் கொடுத்துள்ளார்.ஆனால் புகாரை கென்னடி கண்டு கொள்ளவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து திருச்சி முன்சீப் கோர்ட்டில்வழக்குத் தொடர்ந்தார் வேலுச்சாமி.
இந்த வழக்கில் தடுப்புச் சுவர் கட்ட முருகேசனுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. இந் நிலையில் 3 மாதங்களுக்குமுன்பு தனது 82 வயதான தாயார் மீனாட்சியை மட்டும் வீட்டில் வைத்து விட்டு வெளியூர் சென்று விட்டார்வேலுச்சாமி.
வேலுச்சாமி சென்ற பின்னர், முருகேசன் தடுப்புச் சுவர் கட்டும் பணியை தொடங்கி முடித்து விட்டார். இதனால்வேலுச்சாமி வீட்டில் உள்ள மூதாட்டி மீனாட்சியால் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 3மாதங்களாக அவர் சரியாக சாப்பிட முடியாமல், தண்ணீர் கிடைக்காமல் கடும் அவதிப்பட்டு வருகிறார்.
தடுப்புச் சுவல் சிறிய துளையைப் போட்டு அதன் வழியாக அவரது உறவினர்கள் சாப்பாடு, தண்ணீர்ஆகியவற்றைக் கொடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக திருச்சி மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார்கொடுத்தும் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
82 வயதான மூதாட்டி, கடந்த 3 மாதமாக வீட்டுக் காவலில் இருப்பது போன்ற அவல நிலையில் சிக்கித் தவிப்பதுதிருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications