மேட்டூர், அமராவதி அணைகளை திறக்க ஜெ. உத்தரவு
சென்னை:
பாசத்துக்காகவும், குடிநீருக்காவும் மேட்டூர் மற்றும் அமராவதி அணைகளைத் திறக்க முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோயம்புத்தூர் மாவட்டம் அமராவதி அணையில் இப்போது 3,462 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயப் பெருமக்களிடமிருந்து எனக்குக்கோரிக்கைகள் வந்துள்ளன. அவர்களின் வேண்டுகோளினை ஏற்று அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளேன்.
அமராவதி பழைய பாசனப் பகுதிகளில் 7,520 ஏக்கர் நிலங்கள் பயனடையும் வகையில் கோயம்புத்தூர்மாவட்டத்திலுள்ள 8 பழைய கால்வாய்களிலும், அமராவதி புதிய பாசனப் பகுதிகளில் 25,250 ஏக்கர் நிலங்கள்பயனடையும் வகையில் அமராவதி பிரதான கால்வாயிலும், கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில்நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டினைப் போக்க அமராவதி அணையின் ஆற்று மதகுகளிலிருந்தும் தண்ணீர் திறந்துவிடப்படும்.
ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி மாவட்ட பொது மக்களின் குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையிலிருந்துதண்ணீர் திறந்து விடுமாறு பொது மக்கள் கோரிக்கைகள் வைத்துள்ளனர். அதை ஏற்று மேட்டூர் அணையிலிருந்துஇன்று முதல் 6 நாட்களுக்கு வினாடிக்கு 2,000 கனஅடி வீதம் காவேரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடஉத்தரவிட்டுள்ளேன் என்று கூறப்பட்டுள்ளது.
மேட்டூர் நீர்மட்டம் 53.41 அடி
தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் 53.41 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துவிட்டது.
கர்நாடகத்தின் கபினி அணையிலிருந்து நீர் வருவது வெகுவாக குறைக்கப்பட்டு விட்டதால், மேட்டூர் அணைக்குநீர்வரத்து குறைந்துள்ளது. அணைக்கு தற்போது விநாடிக்கு 3,996 கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டுள்ளது.அணையின் நீர்மட்டம் 53.41 அடியாக உள்ளது.
கபினி அணைப் பகுதியிலும், மேட்டூர் அணைப் பகுதியிலும் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதியமழைஇல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து கொண்டே வருகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications