இராக்கில் 18 தமிழர்களுக்கு அமெரிக்கா கொடுமை
சென்னை:
திருச்சியைச் சேர்ந்த 17 பேரும், சென்னையைச் சேர்ந்த ஒருவரும் இராக் நாட்டில் பலூஜா நகரில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இராக்கில் அமெரிக்கப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே பயங்கர மோதல் நடந்து வரும் நகர்களில் முக்கியமானது பலூஜா. வெளிநாட்டினரைக் கடத்துவது, தலையை வெட்டிக் கொல்வது போன்ற சம்பவங்களால் அங்கிருந்து அன்னியர்கள் அனைவரும் வெளியேறி வருகின்றனர்.
இந் நிலையில் ஜோர்டானைச் சேர்ந்த தாவூத் அண்ட் பார்ட்னர்ஸ் என்ற உணவு நிறுவனத்தில் பணியாற்ற மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஆட்களை வேலைக்குச் சேர்த்தது. ஜோர்டான் நாட்டில் தான் வேலை என்று கூறப்பட்டதால், அதை நம்பி இந்த 18 பேரும் பணம் கொடுத்து பணியில் சேர்ந்தனர்.
ஆனால், ஜோர்டானுக்குச் சென்ற இவர்களை இராக்குக்கு அந்த நிறுவனம் அழைத்துச் சென்றுள்ளது. பலூஜா நகரில் அமெரிக்க வீரர்களுக்கு உணவு சமைத்துத் தரும் பணியில் இவர்களை ஈடுபடுத்தியுள்ளது.
பணம் கட்டி வேலைக்கு வந்துவிட்டதால், வேறு வழியின்றி, தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு மத்தியில் இவர்கள் பணியாற்றி வந்தனர்.
ஆனால், தாக்குதல்கள் மிகவும் அதிகரிக்கவே உயிருக்குப் பயந்து இந்த 18 பேரும் தங்கள் வேலைகளில் இருந்து விலகினர். தங்களை ஊர் திரும்ப அனுமதிக்குமாறு கோரினர். ஆனால், இவர்களை அமெரிக்கப் படையினரும் ஜோர்டான் உணவு நிறுவனம் ஊர் திரும்ப அனுமதிக்க மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு இவர்கள் தகவல் அனுப்பினர். ஆனால், இவர்களை விடுவிக்க தூதரக அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை.
இதைத் தொடர்ந்து இந்த 18 பேரின் குடும்பத்தினரில் சிலர் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு பேக்ஸ் செய்தி அனுப்பியுள்ளனர். முதல்வர் ஜெயலலிதாவின் அலுவலகத்துக்கு இன்று நேரில் வந்து மனுவும் கொடுத்தனர்.
18 பேரையும் மீட்க உதவுமாறு குடும்பத்தினர் தங்களது மனுக்களில் கோரியுள்ளனர்.
வேலையை விட்டு விலகிய பின்னரும் அமெரிக்கப் படையினரின் பலூஜா நகர முகாமிலேயே இவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வேலை செய்யவும் நிர்பந்திக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
இப்போது அவர்களின் விசாக் காலமும் முடிவடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications