சென்னையில் குவியும் விஜயகாந்த் ரசிகர்கள்
சென்னை:
நாளை நடிகர் விஜயகாந்த் முக்கிய முடிவை அறிவிக்கப் போவதாக கூறப்படும் நிலையில் அவரது ரசிகர்கள் சென்னையில்ஏராளமான அளவில் குவிந்து வருகின்றனர்.
விஜயகாந்த், பாமகவினரிடையே ஏற்பட்ட பெரும் மோதல் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ள நிலையில் சென்னையில் தனதுரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் விஜயகாந்த் நாளை முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.
புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கும் மன நிலையில் விஜயகாந்த்தும், அவரது ரசிகர்களும் இருக்கிறார்கள். இது தொடர்பாகஆலோசனை நடத்தி முடிவை அறிவிக்க விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக சென்னைக்கு வருமாறு அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் தனிப்பட்ட முறையில் தொலைபேசி மூலம்அழைத்துள்ளார் விஜயகாந்த். இதையடுத்து நிர்வாகிகள் மட்டுமின்றி ரசிகர்களும் சென்னையில் குவிந்து வருகின்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள விஜய்காந்தின் ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தில் நாளை நடக்கிறது.
விஜயகாந்த்தின் வீடு, அலுவலகம் மற்றும் கல்யாண மண்டபப் பகுதிகளில் ரசிகர்கள் நேற்றே அலைமோத ஆரம்பித்துவிட்டனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications