தமிழக பாஜக தலைவராகிறார் திருநாவுக்கரசர் !
டெல்லி:
முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் தமிழக பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவராக நியமிக்கப்படக் கூடும் என்று டெல்லியில் பேச்சுஅடிபடுகிறது.
மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் தமிழக பாஜக நிர்வாகிகள் மட்டத்தில் பெரும் மாற்றம் மேற்கொள்ள அகில இந்திய பாஜகதலைமை முடிவு செய்துள்ளது.
முக்கிய மாற்றமாக தமிழக பாஜக தலைவராக உள்ள சி.பி.ராதாகிருஷ்ணனை (ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளர்) மாற்றி விட்டு புதியதலைவராக திருநாவுக்கரசரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திருநாவுக்கரசர் சமீபத்தில்தான் மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் ஜெயலலிதாவையும், அதிமுக தலைமையையும் திருநாவுக்கரசர் மிகக் கடுமையாக சாடிவருகிறார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமானவரான திருநாவுக்கரசர் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்படலாம் என்று வெளியாகியுள்ளசெய்திகள் அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
டெல்லியில் இது குறித்து திருநாவுக்கரசர் கூறுகையில், சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. எனவே அதற்குள் கட்சியைபலப்படுத்த போதுமான அவகாசம் உள்ளது.
வரும் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட வேண்டும். இல்லாவிட்டால் கெளரவமான கூட்டணியில் இடம் பெற வேண்டும்.
அதிமுகவுடன் ஏற்பட்டது போன்ற கூட்டணி மீண்டும் பாஜகவுக்கு அமையக் கூடாது. அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டதால்பாஜக தொண்டர்கள் பட்ட அவமானங்களுக்கும், கேவலங்களுக்கும் அளவே இல்லை.
தற்போது அதிமுகவுடன் கூட்டணி முடிந்து விட்டதால் பாஜக தொண்டர்கள் நிம்மதியாக உள்ளனர்.
2011ல் தமிழகத்தில் பாஜகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவதே எனது லட்சியம். அதற்காக மிகக் கடுமையாக உழைக்கப் போகிறேன்என்றார் திருநாவுக்கரசர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications