கண்டதேவியில் வன்முறை: திருமாவளவன் கைது
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டத்தின்போது கள்ளர் மற்றும்தலித் சமூகத்தினரிடையே வன்முறை வெடித்தது. கலவரத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர்.
இந்தத் தேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற திருமாவளவனை போலீசார் மதுரையிலேயே கைது செய்து, தடுத்துவிட்டனர்.
ஜாதிக் கலவர பீதியால் பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த இக் கோவில் தேரோட்டம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நடந்தது.இரு சமூகத்தினரையும் உயர் அதிகாரிகள் சந்தித்துப் பேசி அமைதியாக விழாவை நடத்தித் தர வேண்டினர்.
ஆனாலும், தலித்களை வடம் பிடிக்க விடமாட்டோம் என சிலர் எதிர்க்கவே, பதற்றத்துடன் தான் தேரோட்டம் நடந்தது.
2,000 போலீஸார் பாதுகாப்புடன், கண்காணிப்புக் கேமராக்களின் கண்காணிப்பின் கீழ் தேரோட்டம் தொடங்கியது.
தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் இன்னொரு பிரிவைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் பலர்காயமடைந்தனர். காயமடைந்தவர்களின் பிரிவைச் சேர்ந்தவர்கள் பதில் தாக்குதலில் இறங்கினர். இதனால் அங்கு பெரும் வன்முறைமூண்டது.
இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி வன்றையில் ஈடுபட்டவர்களைக் கலைத்தனர். பின்னர் தேரோட்டம் தொடர்ந்து நடந்து, தேர்நிலைக்கு வந்து சேர்ந்தது.
திருமாவளவன் கைது:
இதற்கிடையே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் தடையை மீறி கண்டதேவி தேரோட்டத்தில் கலந்துகொள்வதற்கு செல்ல முயன்றபோது மதுரையில் கைது செய்யப்பட்டார்.
தேரோட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் போலீஸார் தடை விதித்திருந்தனர்.
இந் நிலையில் தேரோட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருமாவளவன் தனது ஆதரவாளர்களோடு மதுரை திருப்பரங்குன்றத்திலிருந்துதேவகோட்டை செல்ல முயன்றார். ஆனால் அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications