4 நாள் சிபிஐ காவலில் முகம்மது அலி
சென்னை:
போலி முத்திரைத் தாள் வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட சிபிசிஐடி டிஐஜி முகம்மது அலி, உதவி கமிஷ்னர் சங்கர், எல்.ஐ.சி.அதிகாரி ராமசாமி சாது ஆகியோரை 4 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
நேற்று கைது செய்யப்பட்ட இந்த மூவரும் இன்று காலை சென்னை எழும்பூர் 10வது குற்றவியல் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டனர். சிபிஐ தனி நீதிமன்ற நீதிபதி விடுப்பில் சென்றுள்ளதால் இந்த நீதிமன்றத்தில் 3 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அலியும், சங்கரும் போலி முத்திரைத்தாள் மோசடியில் தொடர்புள்ள குற்றவாளிகளைத் தப்ப வைக்க உதவியதாகவும், தெரிந்தே அந்தக்கும்பலுக்கு உதவி செய்ததாகவும், அதற்காக லஞ்சம் பெற்றதாகவும் சிபிஐ வழக்கறிஞர் கூறினார். எல்.ஐ.சி. மூலமாக போலி முத்திரைத்தாள்களை விற்பனைக்கு விட ராமசாமி உதவியதாகக் கூறிய வழக்கறிஞர், இந்த மூவரையும் 5 நாள் தங்களது காவலில் வைத்து விசாரிக்கஅனுமதிக்க வேண்டும் என்றார்.
ஆனால், தனக்கு ஹைபர்டென்சன் எனப்படும் மன அழுத்தம் இருப்பதால் சிபிஐயிடம் தன்னை ஒப்படைக்கக் கூடாது என அலி கூறினார்.தனக்கு நீரிழிவு நோய் இருப்பதாக சங்கரும், தான் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவன் என ராமசாமியும் கூறினர். இதனால்சிபிஐ காவலில் தங்களை ஒப்படைக்கக் கூடாது என்றனர்.
ஆனால், அவர்களது கோரிக்கையை நிராகரித்த நீதிபதி அலமேலு நடராஜன் மூவரையும் வரும் திங்கள்கிழமை முடிய சிபிஐ காவலில்வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார். அதே நேரத்தில் மூவருக்கும் மருத்துவ உதவிகளைச் செய்யவும் உத்தரவிட்டார்.
திங்கள்கிழமை மாலை 3 மணிக்கு இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் சிபிஐக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் முகம்மது அலியை அவரது மனைவி 5 நிமிடம் சந்தித்துப் பேசவும் நீதிபதி அனுமதி வழங்கினார். இதையடுத்து அலியை கோர்ட்வளாகத்திலேயே அவரது மனைவி சந்தித்துப் பேசினார்.
தங்களது காவலில் வைத்திருக்க சிபிஐக்கு அனுமதி தரப்பட்டதால், தேவைப்பட்டால் இந்த மூவரையும் சிபிஐ டெல்லி கொண்டு செல்லும்.அல்லது இங்கு வைத்தே விசாரிக்கும்.
நேற்றிரவு முழுவதும் இந்த மூவரையும் சிபிஐ அதிகாரிகள் தங்களது அலுவலகத்தில் வைத்து விடிய, விடிய விசாரித்தனர்.
சென்னை, மதுரை தவிர ஹைதராபாத்திலும் அதிரடியில் இறங்கிய சிபிஐ அதிகாரிகள், நேஷனல் இன்சூரன்ஸ் நிர்வாக அதிகாரியானவெங்கடேஸ்வர் ராவ் என்பவரையும் இந்த போலி முத்திரைத்தாள் வழக்கில் கைது செய்துள்ளனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications