கால நேரம் பொருந்தி வந்தா புது கட்சி: விஜய்காந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அரசியல் கட்சி ஆரம்பிப்பேன், ஆனால், அதற்கு கால நேரம் பொருந்தி வர வேண்டும் என விஜய்காந்த் கூறினார்.

வருங்கால அரசியல் திட்டம், பா.ம.கவினருடனான மோதல், கஜேந்திரா பட ரிலீஸ் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இன்று தனது ரசிகர்மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜயகாந்த் ஆலோசனை நடத்துகிறார்.

இக் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜய்காந்தின் ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தில் நடக்கிறது. மாநிலம் முழுவதிலும்இருந்தும் நூற்றுக்கணக்கான கார்கள், பஸ்கள், வேன்களில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்.

கூட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக ஏழை, எளிய மாணவ மாணவிகளுக்கு ரூ. 25 லட்சம் அளவுக்கு உதவிகளை வழங்கிய விஜய்காந்த் பின்னர்செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கள்ளக்குறிச்சியில் எனது ரசிகர் மன்ற விழாவில் பொதுப்படையான (பா.ம.கவுக்கு எதிரா) கருத்தைச் சொன்னேன். அதையொட்டி சிலபிரச்சனைகள் (பா.ம.க- ரசிகர்கள் மோதல்) எழுந்தன. இப்போது அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது.

இந்தப் பிரச்சனையில் எனக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.

கடந்த சில வாரங்களாக படப்பிடிப்புக்காக கோவையில் தங்கியிருந்தேன். ஆனால், நான் எங்கோபோய்விட்டதாகவும், தலைமறைவாக இருந்து கொண்டு, ஏதேதோ நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதாகவும்பரபரப்பு செய்திகள் வெளியாகிவிட்டன.

எனது ரசிகர் மன்றத்தின் 32 மாவட்டத் தலைவர்கள், நிர்வாகிகளை இன்று சென்னைக்கு வரவழைத்துள்ளேன்.அவர்களுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க இருக்கிறேன். கட்சி தொடங்குவது குறித்தும்விவாதிப்போம்.

ரசிகர்களில் பலர் அரசியலில் ஈடுபட ஆர்வமாக உள்ளன. ஆனால், அது உடனே எடுக்கும் முடிவல்ல. சிலவரைமுறைகள், காலகட்டம், சந்தர்ப்ப-சூழ்நிலைகளைப் பொறுத்து எடுக்க வேண்டிய முடிவு. அப்படிப்பட்டசந்தர்ப்ப சூழல் ஏற்பட்டால் கட்சி தொடங்குவேன். பின் வாங்க மாட்டேன்.

ரசிகர் மன்றத்தினர் தான் எனக்கு உயிர். அவர்களுக்காக எதையும் செய்வேன்.

அண்ணா திமுகவை ஆரம்பித்த பிறகு தேர்தலில் நிற்கலாமா? வேண்டாம் என்று அட்டைப் பெட்டி வைத்து கருத்துகேட்டார். நிற்கலாம் என்று சொன்ன பிறகு தான் தேர்தலில் குதித்தார். அப்படித்தான் நானும் கருத்துக்களை கேட்டுமுடிவெடுப்பேன். எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

எடுத்து வைக்கும் முயற்சியில் தோல்வி ஏற்பட்டுவிடக் கூடாது. இதனால் நிதானமாகக் காலடி எடுத்து வைக்கவிரும்புகிறேன் என்றார் விஜய்காந்த்.

பா.ம.கவுடனான மோதல் குறித்துக் கேட்டபோது, பிரச்சனைக்கு பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி முற்றுப்புள்ளிவைத்துவிட்டார். இதனால் அது குறித்து மேற்கொண்டு பேசக் கூடாது. என்னை அரசியல் அரைவேக்காடு என்றுராமதாஸ் கூறியிருக்கிறார். அது அவரது ஸ்டைல்.

நான் 12 வயதில் அரசியலில் இறங்கியவன். ரயில் நிலையத்தில் இந்தியை தார் பூசி அழித்தவன். திமுகவின் கலைக்குழுவில் சேர்ந்து பணியாற்றியவன். காவிரிக்காக நெய்வேலி பேராட்டம் நடத்தியவன். கார்கில் நிதியாக ரூ. 2கோடி திரட்ட முன் நின்றவன் என்றார்.

கஜேந்திரா படத்துக்கு பா.ம.கவினரால் இடையூறு வருமா என்ற கேள்விக்கு பதிலளித்த விஜய்காந்த், படத்துக்குஒரு பிரச்சனையும் வராது. இது தொடர்பாக ஜி.கே. மணி அறிக்கை வெளியிட்டுவிட்டார். திரும்பத் திரும்ப அதைப்பற்றியே பேசாதீர்கள் என்றார்.

உங்கள் பேச்சைப் பார்த்தால், பா.ம.கவுடனான மோதலில் நீங்கள் பின் வாங்குவதாகத் தெரிகிறதே என்றுகேட்டபோது, சூடான விஜய்காந்த், பின் வாங்கும் பழக்கம் என் சரித்திரத்திலேயே இல்லை என்றார்.

தெளிவாகச் சொல்லுங்கள், நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா இல்லை என்று கேட்டபோது,

இப்போது ஆர்வமாக இருக்கும் நீங்கள் (நிருபர்கள்), நான் ஒருவேளை தடுக்கி விழுந்தால் ஏறெடுத்துக்கூட பார்க்கமாட்டீர்கள். நான் மிக கவனமாக இருக்கிறேன். எனது அடிகளை அளந்து தான் வைப்பேன்.

கட்சி ஆரம்பித்தால் தைரியமாக ஆரம்பிப்பேன். பல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும் என்னைத் தொடர்புகொண்டு அரசியலில் ஈடுபடுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

ரசிகர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு கட்சி ஆரம்பிப்பது குறித்த முடிவை அறிவிப்பேன். அது தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்றோ அல்லது ஆகஸ்ட் 25ம் தேதியான எனது பிறந்த தினத்திலோ இருக்கலாம் என்றார்விஜய்காந்த்.

அப்போ.. இப்போ ஒண்ணும் இல்லையா! இதுக்குத் தான் இவ்வளவு பரபரப்பா?

Mail this to a friend  Post your feedback  Print this page 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+