அரசு மதுக்கடைகளை மூட பாஜக கோரிக்கை
சென்னை:
தமிழகத்தில் அரசு மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
பாஜகவின் மாநில மகளிர் அணி செயற்குழு கூட்டம் சென்னை கமலாலயத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில்கட்சியின் அகில இந்திய தலைவர் வெங்கையா நாயுடு, மாநில மகளிர் அணித் தலைவி லலிதா சுபாஷ்,பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம் வருமாறு:
வன்முறையைத் தூண்டும் மதுப்பழக்கத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்காமல் மாநில அரசே மதுக்கடைகள்நடத்துவதை ஏற்க முடியாது. தமிழகத்தில் அரசு மதுக்கடைகளை மூடி விட்டு பூரண மதுவிலக்கைஅமல்படுத்தப்படவேண்டும்.
ஈவ் டீசிங்குக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
கர்நாடக இசை மேதை எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரால் ஒரு விருதை ஏற்படுத்தி சிறந்த இசைக் கலைஞர்களுக்குஆண்டுதோறும் தமிழக அரசு விருது வழங்க வேண்டும்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டமசோதாவை விரைவில் நிறைவேற்ற வேண்டும்.
ரத்தசோகை, கர்ப்பப்பை கோளாறுகளை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்து ஆலோசனை தரும் விதமாக பிளஸ் டூமாணவிகளுக்கு பள்ளிகளில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் போன்ற தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications