புதுவை சட்டசபை வளாகத்தில் தடியடி
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி சட்டசபையில், பதவி விலகிச் செல்லும் துணைநிலை ஆளுநர் என்.என்.ஜா உரையாற்றுவதற்குஎதிர்ப்பு தெரிவித்து சட்டசபையை முற்றுகையிட முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் மீதுபோலீஸார் தடியடி நடத்தியதால் புதுவையில் பரபரப்பு ஏற்பட்டது.
புதுவை துணைநிலை ஆளுநராக இருந்த என்.என்.ஜா மீது பல்வேறு புகார்கள் எழுந்ததால் அவர் சமீபத்தில் தனதுபதவியை ராஜினாமா செய்தார். புதிய ஆளுநர் இன்னும் பதவியேற்காததால், இன்று தொடங்கிய புதுவைசட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடரில் ஜா உரையாற்றுவார் என புதுவை அரசு அறிவித்திருந்தது.
இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந் நிலையில் இன்று காலை புதுவை சட்டசபைகூடியபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் சபை வளாகத்தில் கூடி கோஷமிடத் தொடங்கினர்.
சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த அவர்கள் முயன்றபோது போலீஸார் அவர்களைத் தடுத்துநிறுத்திக் கைது செய்ய முயன்றனர். ஆனால் அவர்களை மீறி தொண்டர்கள் முன்னேறிச் சென்றனர். ஆனால்போலீஸார் தடுக்கவே இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் கைகலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது போலீஸார் தடியடிப் பிரயோகம் செய்தனர். இதில் புதுவைமாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் முருகன் உள்ளிட்ட சிலர் படுகாயம் அடைந்தனர். பின்னர் அவர்களைபோலீஸார் கைது செய்தனர்.
போலீஸாரின் நடவடிக்கையைக் கண்டித்து புதுவை முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர். தடியடி தொடர்பாக புதுவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications