பொது மக்களை தாக்கிய சென்னை வழக்கறிஞர்கள்
சென்னை:
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் இல்லாததால் தாங்கலேளஆஜராகி வாதாடிய மருத்துவக் கல்லூரிமாணவர்களின் பெற்றோர்கள் மீது வழக்கறிஞர்கள் ரெளடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.
மதுரை உயர் நீதிமன்றக் கிளை விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டம்நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக வழக்குகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.
தலைமை நீதிபதியின் சமாதானத்தையடுத்து இன்று முதல் சில நாட்களுக்கு போராட்டத்தை கைவிடுவதாகவழக்கறிஞர்கள் அறிவித்துள்ளனர்.
இந் நிலையில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது மாணவர்கள் சார்பில் ஆஜராக வழக்கறிஞர்கள் இல்லை.
இதனால் மாணவர்களின் பெற்றோர்களே ஆஜராகி தங்களது தரப்பு நியாயங்களை எடுத்துக் கூறினர்.
வாதங்கள் முடிந்த பிறகு வெளியே வந்த அவர்கள், நீதிமன்றத்தில் தாங்கள் பேசியது குறித்துசெய்தியாளர்களிடமும் எடுத்துக் கூறினர்.
அப்போது அங்கு வந்தார் ஒரு பெண் வழக்கறிஞர்கள். நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த அவர், நீங்களேஎப்படி வாதம் நடத்தலாம், அப்படியே நடத்தினாலும் அதை எதற்காக பத்திரிக்கைகாரங்கிட்ட விளக்கம் தர்றீங்கஎன்றார்.
இதையடுத்து அவருக்கும், பேட்டி கொடுத்த மாணவியின் தந்தைக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அங்கு வந்த இரண்டு வழக்கறிஞர்கள், பேட்டி கொடுத்த மாணவியின் தந்தையை ரெளடிகளைப் போலகடுமையாக தாக்கினர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை பார்க்க வந்த திருச்சி வழக்கறிஞர்களை சென்னை உயர்நீதிமன்றவழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பிரபாகரன் தலைமையிலான குழுவினர் தாக்கியது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் தங்கள் குழந்தைகளுக்காக வழக்கில் வாதாட வந்த பெற்றோர்களும் வழக்கறிஞர்களால்தாக்கப்பட்டுள்ளனர்.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications