தமிழகத்திற்கு நியாயம் கிடைக்குமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் பல ரயில்வே திட்டங்கள் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் நிறைவேறாமல் உள்ளன.

இன்று தாக்கல் செய்யப்படவுள்ள ரயில்வே பட்ஜெட்டில் இந்தத் திட்டங்களுக்கு உயிர் கொடுக்கப்படுமா என்றஎதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே எழுந்துள்ளது.

கடந்த 50 ஆண்டுகளாக ரயில்வே துறையால் புறக்கணிக்கப்பட்டு வந்த மாநிலம் தமிழகம். பக்கத்துக்குமாநிலங்களாக கேரளாவுக்கும், கர்நாடகத்துக்கும் ஏகப்பட்ட புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோதும்தமிழகத்தை கண்டு கடந்த அரசுகள் கண்டுகொள்ளவில்லை.

பெங்களூரில் இருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ரயிலை விட்டார்கள். ஆனால், அதை கேரளாபக்கமாகத் திருப்பி, கேரளம் முழுவதும் பயணம் செய்துவிட்டு கடைசியில் ஒரு பேச்சுக்கு கன்னியாகுமரிக்குள்நுழைகிறது அந்த ரயில்.

இப்படி தமிழகத்தை பல வழிகளில் ஏமாற்றி வந்தது ரயில்வே துறையும் மத்திய அரசுகளும்.

பேட்டா, படிக்காசு, காண்ட்ராக்ட், இலவச விமான பயணம், ஓசி வீடு, கேஸ் ஏஜென்சி, டெலிபோன் கனெக்சன்கமிஷன் என டெல்லியில் கொட்டமடித்த தமிழக எம்.பிக்களும் இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டதும்இல்லை.

கடந்த பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் தான் இந்தக் குறை ஓரளவுக்கு போக்கப்பட்டது. ரயில்வேத்துறைஇணையமைச்சராக பா.ம.கவைச் சேர்ந்த ஏ.கே. மூர்த்தி தமிழகத்துக்கு கடந்த 50 ஆண்டுகளாக செய்யப்பட்டஅநியாயத்தை சீர் செய்யும் வகையில் புதிய பல திட்டங்களைக் கொண்டு வந்தார்.

படிக்காத அமைச்சர் என்றாலும் தனது கடுமையான உழைப்பாலும், மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றஎண்ணத்தாலும் ரயில்வேயின் அதிகார மையங்களை தமிழகத்தை நோக்கி பார்க்கச் செய்தார்.

இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. மீண்டும் தமிழக எம்.பிக்களின் தயவால் தான் மத்திய அரசுஅமைந்துள்ளது. மூர்த்தியைத் தூக்கிவிட்டு வேலுவை இணையமைச்சராக்கியிருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர்ராமதாஸ்.

இந் நிலையில் இன்று தனது முதலாவது ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் அமைச்சர் லாலு பிரசாத் யாதவ்.பட்ஜெட் தாக்கலைப் புறக்கணிப்பபோம் என பா.ஜ.க. ஒரு பக்கம் சவால் விட்டுக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையே இந்த பட்ஜெட்டில் தமிழகத் திட்டங்களுக்கு லாலு போதிய நிதியை ஒதுக்குவாரா என்ற ஆர்வம்எழுந்துள்ளது.

தற்போதைய நிலையில் தமிழகத்தில் நிதிப் பற்றாக்குறை காரணமாக தடுமாற்றத்தில் நிற்கும் ரயில்வே திட்டங்களைப்பற்றிப் பார்ப்போம்:

இந்திய ரயில்வேக்களிலேயே தமிழகத்தின் தென்னக ரயில்வே தான் அதிக மீட்டர் கேஜ் ரயில் பாதைகளைகொண்டுள்ளது. இவற்றை அகலப் பாதைகளாக மாற்றும் திட்டங்களுக்கு ரயில்வே துறை போதிய நிதியைஒதுக்கவில்லை.

போதிய நிதியில்லாததால், தென்காசி-கொல்லம், திருச்செந்தூர்-தென்காசி, கும்பகோணம்-தஞ்சாவூர்,மதுரை-ராமேஸ்வரம், விழுப்புரம்-கும்பகோணம், காரைக்குடி-மானாமதுரை, திருச்சி-காரைக்குடி,எழும்பூர்-செங்கல்பட்டு ஆகிய வழித் தடங்களில் நத்தை வேகத்தில் அகல ரயில்பாதை அமைக்கும் பணிகள்நடந்து வருகின்றன.

இந்த வேலைகள் கூட ஏ.கே.மூர்த்தி அமைச்சராக இருந்தபோது தான் தொடங்கின.

ஆனால், கும்பகோணம்-தஞ்சாவூர், மதுரை-ராமேஸ்வரம் திட்டங்களுக்கு ரூ. 50 கோடியை மூர்த்தி ஒதுக்கித் தந்தும்கூட, இந்தப் பணிகளை ரயில்வே இன்னும் தொடங்கவேயில்லை.

சென்னை நகரில் திருவான்மியூர் முதல் வேளச்சேரி வரையிலான மாடி ரயில் திட்டம் இன்னும் நிறைவுபெறவில்லை. இந்தத் திட்டத்திற்கு சமீபத்தில் தான் கூடுதலாக ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கும்மூர்த்தியே முக்கியக் காரணம்.

மூர்த்தி காட்டிய அதே ஆர்வத்தை இப்போதைய பாமக மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலுகாட்டுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். லாலுவிடம் பேசி பட்ஜெட்டில் தமிழகதிட்டங்களுக்கு எந்த அளவுக்கு நிதியை ஒதுக்கச் செய்திருக்கிறார் என்பது இன்று தெரிந்துவிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+