நகைகள் பறி கொடுத்தவரை அசத்திய போலீஸ்
சென்னை:
கொள்ளையடிக்கப்பட்ட 53 பவுன் நகைகளை சம்பந்தப்பட்டவரின் வீட்டுக்கே சென்று கொடுத்து அசத்திவிட்டனர்சென்னை போலீஸார்.
சென்னை கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள குடியிருப்பில் வசிப்பவர் சத்யலட்சுமி. இவர்முதுகெலும்பில் அடிபட்டு நடமாட முடியாமல் படுத்த படுக்கையாக இருக்கிறார்.
தனியாக வசித்து வரும் இவருக்கு வேலைக்காரப் பெண் ஒருவர் மட்டுமே துணையாக உள்ளார்.
சில வாரங்களுக்கு முன் வேலைக்காரப் பெண் வெளியில் சென்றிருந்த நிலையில், வீட்டுக்குள் புகுந்த சிலர்சத்யலட்சுமியிடம் இருந்து பீரோ சாவியைப் பறித்து, அதில் இருந்த 53 பவுன் நகைகளை அவரது கண் முன்பாகவேதிருடிச் சென்றனர்.
படுத்த படுக்கையாகக் கிடக்கும் சத்யலட்சுமியால் அதைத் தடுக்கவோ, உதவி கோரி சத்தம் எழுப்பவோ கூடமுடியவில்லை.
சம்பவம் குறித்து தனது வேலைக்காரப் பெண் மூலமாக கீழ்ப்பாக்கம் போலீஸாரிடம் புகார் கொடுத்தார். போலீசார்தீவிர விசாரணை நடத்தி திருடனைக் கண்டுபிடித்து நகைகளை மீட்டனர்.
சத்யலட்சுமியின் உறவினர் முரளி என்பவன் சொல்லித் தான், அந்தத் திருடன் நகைகளைக் கொள்ளையடித்தான்என்றும் தெரிய வந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட நகைளை இணை ஆணையர் சைலேந்திரபாபுவும் கீழ்பாக்கம் போலீசாரும்சத்யலட்சுமியின் வீட்டிற்கே சென்று அவரிடம் கொடுத்தனர்.
போலீஸாரின் இந்த நடவடிக்கையால் சத்யலட்சுமி நெகிழ்ந்து போனார்.
இனிமேல் திருடு போய் பறிமுதல் செய்யப்படும் நகைகள், சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்றுகொடுக்கப்படும் என்று சைலேந்திரபாபு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications