மத்திய பட்ஜெட்: கடல் நீரை குடிநீராக்க சென்னைக்கு 1,000 கோடி
டெல்லி:
சென்னை நகரில் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ. 1,000 கோடிஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே சென்னையில் தான் முதன்முறையாக இந்தத் திட்டம் அமலாக்கப்படவுள்ளதாகநிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
இன்று மக்களவையில் 2004-05ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த சிதம்பரம், குடிநீர், பாசனத்திட்டங்கள் குறித்துப் பேசியபோது தமிழகத்தின் குடிநீர்ப் பிரச்சனை குறித்து சில நிமிடங்கள் பேசினார்.
அவர் கூறியதாவது:
2 குடம் தண்ணீருக்காக இரவில் மக்கள் தூங்காமல் விழித்திருப்பதையும், கிராமப் பகுதிகளில் தண்ணீர் கொண்டுவருவதற்காக பெண் குழந்தைகளை பெற்றோர் பள்ளிகளில் இருந்து விலக்குவதையும் குறிப்பிட்ட சிதம்பரம், நீர்ஆதாரத்தைப் பெருக்கினால் ஒழிய நாட்டின் எதிர்காலம் மிகப் பெரிய கேள்விக்குறியாகிவிடும்.
சென்னையின் குடிநீர்ப் பிரச்சனையை சொல்லி மாள முடியாது. அந்த அளவுக்கு மக்கள் சிரமப்படுகிறார்கள்.இதனால் நாட்டிலேயே முதல் முறையாக மிகப் பெரிய அளவில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைசென்னையில் அமலாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்துக்காக ரூ. 1,000 கோடி உடனடியாக ஒததுக்கப்படுகிறது. சென்னை தவிர கோரமண்டல் கடலோரப்பகுதிகளிலும் இத் திட்டம் அமலாக்கப்படும்.
அதே போல தமிழகம் உள்பட நாட்டின் வளர்ச்சிக்கு பெருமளவில் உதவப் போகும் சேது சமுத்திரத் திட்டத்தைஉடனடியாக அமலாக்கிடவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
தமிழகத்துக்கான இத் திட்டங்களை ப.சிதம்பரம் அறிவித்தபோது திமுக, பா.ம.க, மதிமுக உஉறுப்பினர்களும்தமிழக காங்கிரஸ் எம்.பிக்களும் மேஜைகளைத் தட்டி வரவேற்றனர்.
சில வட இந்திய எம்.பிக்கள், உங்கள் மாநிலத்துக்கு மட்டும் தனி கவனிப்பா, சிதம்பரம் என்று கேட்க, அவர்களுக்குபுன்னகையை மட்டும் பதிலாகத் தந்தார் சிதம்பரம்.
இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என திமுக கூட்டணிக் கட்சிகள் உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications