வீரப்பன் கூட்டாளிகளின் கருணை மனு தள்ளுபடி?
பெங்களூர்:
தங்களது தூக்கு தண்டனையை ரத்து செய்யுமாறு வீரப்பனின் 3 கூட்டாளிகள் கொடுத்துள்ள கருணைமனுவை நிராகரிக்குமாறு கவர்னருக்கு கர்நாடக அரசு பரிந்துரை செய்துள்ளது.
பாலாறு காட்டுப் பகுதியில் கடந்த 1990ம் ஆண்டு கர்நாடக போலீசாரின் வாகனங்களை கண்ணிவெடி வைத்து தகர்த்தான் வீரப்பன். அதில் 22 போலீசாரும் அதிகாரிகளும் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலில் வீரப்பனுக்கு உதவி புரிந்ததாக சைமன், ஞானப்பிரகாஷ், மீசேகர் மாதையாஆகியோரை கர்நாடக போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் தூக்குதண்டனை விதித்தது. உச்ச நீதிமன்றமும் சமீபத்தில் இந்த தண்டனையை உறுதி செய்தது.
இந்த தண்டனையை ரத்து செய்து, அதை ஆயுள் தண்டனையாக மாற்றக் கோரி மூவரின் சார்பிலும்ஜனாதிபதியிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களின் சார்பில் கருணை மனுவை சமூக நலஅமைப்பு ஒன்று கர்நாடக ஆளுநர் சதுர்வேதியிடம் கொடுத்துள்ளது.
அவர் ஜனாதிபதிக்கு இந்த மனுவை அனுப்பவுள்ளார்.
இந் நிலையில் இன்று கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டது.அதில், கருணை மனுவை நிராகரிக்குமாறு ஆளுநருக்கு கோரிக்கை விடுப்பது என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications