திருக்குறள் மீதான தடையை நீக்கியது மத்திய அரசு !
டெல்லி:
திமுக எடுத்த முயற்சிகளையடுத்து திருக்குறள் நூலின் ஆங்கிலப் பிரதியை அச்சிடுவதற்கு விதித்திருந்த தடையைமத்திய அரசு நீக்கியுள்ளது.
பாஜக ஆட்சிக் காலத்தில் இந்துத்துவாவை முன்னிருத்தி, தேசிய கல்வி மற்றும் ஆய்வு மையத்தின் சார்பில் பல்வேறுநூல்களை அச்சிடும் பணி மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவந்தது.
இந் நிலையில், காங்கிரஸ் ஆட்சி வந்தவுடன் மத்திய மனித வள அமைச்சகம், தேசிய கல்வி மற்றும் ஆய்வுமையத்தின் பணிகளை முழுமையாக மறுபரிசீலனை செய்து, சில புத்தகங்கள் அச்சிடுவதை நிறுத்தி வைக்கஉத்தரவிட்டது. அதில் ஒன்று திருக்குறள்.
திருக்குறளில், மதம் சார்ந்த வாசகங்கள் இருப்பதாகக் கூறிய மத்திய மனித வள அமைச்சகம், நூலை முழுமையாகஆய்வு செய்த பின்னர் அச்சிடுமாறு தேசிய கல்வி மற்றும் ஆய்வு மையத்திற்கு உத்தரவு பிறப்பித்தது.
திருக்குறள் குறித்து துளியும் தெரியாத சில வட இந்திய அதிகாரிகளால் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவுக்கு கடும்கண்டனம் எழுந்தது.
இதையடுத்து மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன், மனித வள மேம்பாட்டுத்துறைஅமைச்சர் அர்ஜூன் சிங்கை சந்தித்துப் பேசினார். இதையடுத்து தடையை உடனே நீக்கி சிங் உத்தரவிட்டார்.
திருக்குறள் தவிர, பிரபல காங்கிரஸ் தலைவரான கரண்சிங் எழுதிய வேதாந்த நூல் விதிக்கப்பட்ட தடையும்நீக்கப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications