கும்பாபிஷேகங்கள்: மீண்டும் பணிந்தார் ஜெ.
சென்னை:
பிள்ளையார்பட்டி கோவிலைத் தொடர்ந்து பிற கோவில்களின் கும்பாபிஷேகங்களையும் இந்த ஆண்டேநடத்திவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
முதலில் பிள்ளையார்பட்டி விஷயத்தில் பக்தர்களிடம் பணிந்த அணிந்த இப்போது பிற கோவில்கள் விஷயத்திலும்இறங்கி வந்துள்ளது.
தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 83 கோவில்களில் இந்த ஆண்டுகும்பாபிஷேகம் நடத்தப்படும் என அரசு அறிவித்தது. இதையடுத்து கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளைகோவில் நிர்வாகிகள் செய்தனர்.
ஆனால், திடீரென அதை அடுத்த வருடத்துக்குத் தள்ளி வைத்தது அரசு. முதல்வர் ஜெயலலிதாவின் நலனைக்கருத்தில் கொண்டு அவரது ஜோதிடர்கள் வழங்கிய அறிவுரையையடுத்து கும்பாபிஷேகங்களை அரசு தள்ளிவைத்ததாக புகார் எழுந்தது.
இந் நிலையில் பிள்ளையார்பட்டி கோவில் நிர்வாகிகள், திட்டமிட்டபடி கும்பாபிஷேகத்தை நடத்தியே தீருவோம்என அறிவித்தனர். அவர்களை அறநிலையத்துறை அதிகாரிகள், மாவட்ட கலெக்டரை வைத்து மிரட்டியும்சமாதானப்படுத்தியும் பார்த்தது அரசு.
ஆனால், கோவிலை நிர்வகித்து வரும் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் இந்த விவகாரத்தை ஜனாதிபதிஅப்துல்கலாம் மற்றும் நீதித்துறையில் உயர் மட்டத்தில் உள்ள செட்டியார் சமூக விவிஐபிக்களின் கவனத்துக்குஎடுத்துச் சென்றனர்.
நிலைமை தங்களை மீறிப் போவதை உணர்ந்த அரசு, பிள்ளையார்பட்டி கோவிலில் மட்டும் கும்பாபிஷேம் நடத்தஅனுமதி தந்தது. இதையடுத்து நேற்று முன் தினம் படுவிமரிசையாக கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது.
இந் நிலையில் பிற கோவில் நிர்வாகிகளும் பக்தர்களும் அங்கும் உடனே கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் எனஅரசுக்கு நெருத்தல் தந்தனர். கும்பாபிஷேகத்துக்கு தேதியை அறிவித்துவிட்டு அதை ஒத்திவைப்பு நல்லதல்ல எனபல ஆன்மிகத் தலைவர்களும் கருத்து தெரிவித்தனர்.
விட்டால், உத்தரவையும் மீறி கும்பாபிஷேகம் நடத்திவிடுவார்கள் என்று அஞ்சிய தமிழக அரசு பிற முக்கியக்கோவில்களின் கும்பாபிஷேகத்தையும் உடனடியாக நடத்த அனுமதித்துள்ளது.
இதன்படி அடுத்த ஆண்டுக்குத் தள்ளிவைக்கப்பட்ட மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், வரும்ஆகஸ்ட் 30ம் தேதியன்று நடக்கும்.
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் ஆகஸ்ட் 22ம் தேதியும், குணசீலம் பிரசண்ண வெங்கடேச பெருமாள்கோவில், திருச்சி, அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் ஆகஸ்ட் 27ம் தேதியும் கும்பாபிஷேகம்நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிலெடுத்தாலும் காலையில் ஒரு உத்தரவு, மாலையில் ஒரு உத்தரவு என புரட்சி செய்து கொண்டிருக்கும் தமிழகஅரசு கோவில்கள் போன்ற பக்தர்களின் சென்சிட்டிவான விஷயங்களிலாவது நன்றாக சிந்தித்து, தீர்க்கமானமுடிவுகளை எடுக்கலாம்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications