ஈவ் டீசிங் செய்யப்பட்ட பெண் தற்கொலை: போலீசின் தவறால் விபரீதம்
அரியலூர்:
அரியலூர் அருகே ஈவ் டீசில் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட பெண்ணையே போலீசார் கைதுசெய்தனர். இதனால் மனமுடைந்த அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
திருமழப்பாடியைச் சேர்ந்தவர் விஜயா (21). இவர் தனது வீட்டு மாடியில் இருந்தபோது பக்கத்துவீட்டைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் மாடியேறி வந்து கிண்டல் செய்துள்ளார்.
இதையடுத்து தனது அண்ணன் ராஜவேலுவிடம் விஜயா புகார் செய்தார்.
இதையடுத்து கார்த்திகேயனின் வீட்டுக்குச் சென்று தட்டிக் கேட்டார் ராஜவேலு. அப்போது அவரைகார்த்திகேயனும் அவரது அண்ணன் அன்பழகனும் சேர்ந்து தாக்கியுள்ளனர்.
இதனால் வெறுத்துப் போன ராஜவேலு போலீசில் புகார் செய்தார்.
இந் நிலையில் கார்த்திகேயன் சார்பிலும் ஒரு புகார் மனு போலீசாரிடம் தரப்பட்டது. அதில்,தன்னையும் தனது அண்ணனையும் ராஜவேலு மற்றும் அவரது உறவினர்கள், விஜயா ஆகியோர்தாக்கியதாகக் கூறியிருந்தார்.
இந்தப் புகார்களை முறையாக விசாரிக்காத காக்கிச் சட்டைகள், ராஜவேலு உள்பட எல்லோர் மீதும்வழக்குப் பதிவு செய்தனர்.
ஈவ் டீசிங் கிண்டலுக்கு உள்ளான விஜயா மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.இதைையடுத்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் விஜயா. அங்கு ஜாமீனில் விடுதலைசெய்யப்பட்டார்.
கேலிக்குள்ளான தன்னையும் வழக்கில் சேர்த்து கைது செய்து, காவல் நிலையத்தில் வைத்துவிசாரித்து, நீதிமன்றத்தில் நிற்க வைத்து கேவலப்படுத்திவிட்டார்களே என வெறுத்துப் போனவிஜயா வீட்டிற்கு வந்து அழுதபடியே இருந்தார்.
இந் நிலையில் அதிகாலையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
லேப் டெக்னீஷியன் கோர்ஸ் முடித்துள்ள விஜயா நாளை (12ம் தேதி) தஞ்சாவூரில் ஒருமருத்துவனையில் வேலைக்கு சேர இருந்தார். இந் நிலையில் ஈவ் டீசிங், போலீஸ் செய்த தவறுஆகியவை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications