ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஜப்தி
ஈரோடு:
வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் கட்டுவதற்கு நிலம் கொடுத்தவர்களுக்குப் பணம் கொடுக்காததால் ஈரோடுவிரைவு நீதிமன்றம் உத்தரவுப்படி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்யப்பட்டது.
ஈரோடு முத்தம்பாளையத்தில் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளைக் கட்டவதற்கு அப்பகுதியில் உள்ளநிலங்களைக் கையகப்படுத்தும் பணியை ஈரோடு மாவட்ட நிர்வாகம் 1991ம் ஆண்டு முதல் 1997ம் ஆண்டு வரைமேற்கொண்டது. சதுர அடிக்கு ரூ. 1 நிர்ணயம் செய்யப்பட்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது.
ஆனால், அரசு நிர்ணயித்த விலை போதாது என்று கூறி வீட்டு வசதி வாரியத்துக்கு நிலம் கொடுத்தஉரிமையாளர்கள், கூடுதல் விலை கேட்டு ஈரோடு விரைவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி சாத்தப்பிள்ளை, நில உரிமையாளர்களுக்கு ரூ. 6.91 கோடி வழங்க ஈரோடு மாவட்டநிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்மேல் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், விரைவு நீதிமன்றம் கூறியதொகையில் பாதித் தொகையை நிலம் கொடுத்தவர்களுக்குக் கொடுக்கும்படி உத்தரவிட்டனர்.
ஆனால் நில உரிமையாளர்களுக்கு ஈரோடு மாவட்ட நிர்வாகம் பணம் கொடுக்கவில்லை. அதையடுத்து அவர்கள்உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கோரி விரைவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி சாத்தப்பிள்ளை, நீதிமன்ற உத்தரவுப்படி பணம் கொடுக்காததால் ஈரோடு மாவட்டஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்யுமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து ஈரோடு விரைவு நீதிமன்றஅமீனாக்கள் 5 பேர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலம் சென்று, ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம்நீதிமன்ற உத்தரவைக் கொடுத்தனர்.
பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்தனர். பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஜப்தி செய்ததற்கானஆவணங்களை வழங்கி ஜப்தியை பதிவு செய்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகமே ஜப்தி செய்யப்பட்டிருப்பது ஈரோடு நகரில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications