கற்பழிப்பு முயற்சியில் அதிகாரியின் மனைவி கொலை
சென்னை:
சென்னை அண்ணா நகரில் பட்டப் பகலில் கப்பல் போக்குவரத்துக் கழக அதிகாரியின் மனைவியை கற்பழிக்கமுயன்ற சிலர் அது தோல்வியுற்றதால் அவரை படுகொலை செய்தனர்.
சென்னை அண்ணா நகர் மடுவங்கரை பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்குள்ள6-வது அடுக்கு மாடிக் குடியிருப்பின் 3வது தளத்தில் கேரளாவைச் சேர்ந்த பிஜூ என்பவர் தனது மனைவி அனிதா,மகன் அபிஜித் ஆகியோருடன் தங்கியுள்ளார்.
பிஜூ கப்பல் போக்குவரத்துக் கழகத்தில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி அனிதா வீட்டில் தனியாகஇருந்தபோது சிலர் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
அந்த கும்பல், அனிதாவை கற்பழிக்க முயற்சி செய்துள்ளது. இதையடுத்து உதவி கேட்டு அனிதா குரல் எழுப்பிப்போராடியுள்ளார். ஆனால் அவரது குரல் வெளியே கேட்கவில்லை. மர்ம ஆசாமிகள் மீது மிளகாய்ப் பொடியைத்தூவியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் அனிதாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர். பின்னர் கத்தியால்சரமாரியாகக் குத்தியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் விழுந்தார் அனிதா. பின்னர் அந்த நபர்கள் தப்பிவிட்டனர்.
காலை 11 மணியளவில் வீட்டு உரிமையாளர் வாடகைப் பணம் வாங்க அனிதாவின் வீட்டுக்கு வந்து காலிங்பெல்லை அடித்துள்ளார். ஆனால் சப்தமே இல்லை. இதையடுத்து அருகில் இருந்த அனிதாவின் சகோதரிபீனாவின் வீட்டுக்குச் சென்று தகவல் கூறினார்.
அவர் விரைந்து வந்து கதவத்ை தட்டியுள்ளார். ஆனால் கதவு திறந்து கொண்டது. இதையடுத்து உள்ளே சென்றுபார்த்த அவர் அனிதா ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ந்தார்.
இதையடுத்து காவல்துறைக்குத் தகவல் போனது. ஆணையர் நடராஜன், இணை ஆணையர் சைலேந்திரபாபுஉள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர்.
பட்டப் பகலில் நடந்த இந்த படுகொலை சென்னை நகரில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த ஆசாமிகள்யார் என்பதை விரைவில் கண்டுபிடிப்போம் என சைலேந்திரபாபு கூறியுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications