ரூ. 20 கோடி பணம்: கருத்து கூற ரஜினி மறுப்பு
மைசூர்:
நடிகர் ராஜ்குமார் மீட்பின்போது, போலி முத்திரைத் தாள் மோசடி மன்னன் அப்துல் கரீம் டெல்ஜியின் பணம்தனது மேலாளர் மூலமாக பரிவர்த்தனை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி குறித்துக் கருத்துக் கூற நடிகர்ரஜினிகாந்த் மறுத்து விட்டார்.
போலி முத்திரைத் தாள் மோசடி மன்னன் டெல்ஜியிடமிருந்து ரூ. 20 கோடி பணத்தைப் பெற்று, நடிகர்ரஜினிகாந்த்தின் மேலாளர் மூலமாக வீரப்பனுக்கு கொடுக்கப்பட்டதாக இந்த வழக்கில் கைதாகியுள்ள கர்நாடகமுன்னாள் காவல்துறை அதிகாரி சங்கர் ராம் சிங் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அப்போதைய கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் வலியுறுத்தல் காரணமாக, ராஜ்குமாரை மீட்பதற்காகடெல்ஜியிடமிருந்து பணம் பெற்று அதை ரஜினி மேலாளர் மூலமாக வீரப்பனுக்குக் கொடுத்ததாகவும் அவர்தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி குறித்து ரஜினி தரப்பிலிருந்து இதுவரை விளக்கம் எதுவும் வரவில்லை. இந் நிலையில் மைசூரில்உள்ள சாமுண்டேஸ்வரி கோவிலுக்கு ரஜினிகாந்த் தரிசனம் செய்ய வந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்கள் இதுகுறித்து ரஜினியிடம் கேட்டபோது, கர்நாடக முன்னாள் காவல்துறை அதிகாரிசங்கர்ராம் சிங் கூறியது குறித்து எனக்குத் தெரியாது, நான் அந்த செய்திகளைப் படிக்கவும் இல்லை.
இது ஒரு வழக்கு. விசாரணை நடந்து வருகிறது, நீதிமன்றத்தில் உள்ளது. எனவே இந்த சமயத்தில் நான் இதுகுறித்துகருத்து கூற முடியாது என்று கூறி விட்டு சென்று விட்டார் ரஜினிகாந்த்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications