மருத்துவ கல்லூரி விவகாரம்: அன்புமணிக்கு ராமதாஸ் ஆதரவு
சென்னை:
தூத்துக்குடி, கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கவும், நெல்லை மருத்துவக் கல்லூரிக்குகூடுதலாக 50 சீட்கள் வழங்கவும், இந்திய மருத்துவக் கவுன்சில் மறுத்துள்ள விவகாரத்தில், சுகாதாரத் துறைஅமைச்சர் அன்புமணி தலையிட்டு தமிழக நலனைக் காப்பார் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரும்,அன்புமணியின் தந்தையுமான ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரிகளுக்குஅங்கீகாரம் வழங்க இந்திய மருத்துவக் கவுன்சில் மறுத்து விட்டது. அதேபோல, நெல்லை மருத்துவக் கல்லூரியில்கூடுதலாக 50 மாணவர் இடங்களை அனுமதிக்கவும் அது மறுத்து விட்டது. இதனால் தமிழகத்திற்கு கூடுதலாக 250சீட்கள் கிடைக்க இருந்தது பறிபோயுள்ளது.
இந்திய மருத்துவக் கவுன்சிலின் நடவடிக்கையை தமிழக அரசு கடுமையாக சாடியுள்ளது. மேலும், மத்தியசுகாதாரத் துறை அமைச்சராக இருக்கும் பாமகவின் அன்புமணி, தமிழக நலனைக் கருத்தில் கொண்டு இந்தவிவகாரத்தில் தலையிடாமல் அலட்சியம் காட்டுவதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.
இந் நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்திய மருத்துவக் கவுன்சில் என்பதுஒரு சுயேச்சை அமைப்பு. இதில் மத்திய சுகாதாரத் துறை தலையிட முடியாது. இருப்பினும், தமிழக நலன்கருதியும், இட ஒதுக்கீட்டுக் கொள்கையை காக்கவும், இப்பிரச்சினையில் தலையிட அன்புமணி முடிவுசெய்துள்ளார்.
பாங்காக் சென்றுள்ள அன்புமணியிடம் பேசினேன். 250 சீட்களைப் பெறுவதில் அவர் மிகவும் ஆர்வமாக உள்ளார்.
தொழுநோய் தொற்று நோய் என்று நாடாளுமன்றத்தில் அன்புமணி பேசியதில் தவறில்லை. அது தொற்று நோய்தான் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன என்றார் அவர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications