விஜயகாந்த்தைக் கண்டித்து போஸ்டர்கள்
சென்னை:
சென்னையில் நடிகர் விஜயகாந்த்தைக் கண்டித்து நடிகர் சங்க சுவர் உள்ளிட்ட சில பகுதிகளில் திடீர் போஸ்டர்கள்தோன்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இயக்குநர் பாரதிராஜாவுக்கும், நடிகர் விஜயகாந்த்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றுவதற்கு விஜயகாந்த்தின்மொழிப் பற்று தடுப்பதாக பாரதிராஜா கடுமையாக சாடியிருந்தார். மேலும் கலை நிகழ்ச்சிகளுக்கு நடிகர்,நடிகைகளை விஜயகாந்த் தடை செய்வதாகவும் சாடியிருந்தார்.
இதற்கு பதிலளித்த விஜயகாந்த், பாரதிராஜாவின் புகாருக்கு எல்லாம் பதில் தர வேண்டிய அவசியம் இல்லை என்றுகாட்டமாக தெரிவித்திருந்தார்.
இந் நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க வளாக சுவற்றில் திடீர் என்று சில போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.அதில், பச்சைத் தமிழன் பாரதிராஜா வாழ்க, தேர்தலே நடத்தாமல் கோல்மால் செய்து தலைவரான தெலுங்கர்விஜயகாந்த்தே, தமிழ் நடிகர்கள் ரத்தத்தைக் குடித்து நாடாளத் துடிக்கும் உனக்கு, நடிகர் சங்கத் தலைவர் பதவி ஒருகேடா... உடனே ராஜினாமா செய். தமிழ் நடிகர்களே.. தூங்கியது போதும். விழித்தெழுங்கள் என்றுகூறப்பட்டிருந்தது.
பாரதி தமிழ் பேரவை என்ற பெயரில் இதுபோன்ற போஸ்டர்கள் வடபழனி, கோடம்பாக்கம், விருகம்பாக்கம்உள்ளிட்ட பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டிருந்தது. பாமகவினர் இதற்குப் பின்னணியில் இருக்கலாம் என்றுவிஜயகாந்த் ரசிகர்கள் சந்தேகப்படுகிறார்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications