சினிமாவில் நடிக்க மாட்டேன்: குட்டி சாமியார்
சென்னை:
சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று சேலம் குட்டி சாமியார் பரணிதரன் கூறினார்.
பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாதவர் சேலம் குட்டி சாமியார். பெற்றோருடன் கருத்து வேறுபாடு, மான்தோல்பிரச்சினை, நம்பர் இல்லாத காரில் பயணம், திடீர் தலைமறைவு என பத்திரிக்கைகளில் பரபரப்பாக இருக்கும்குட்டி சாமியார் இன்று சென்னை வந்தார்.
குட்டிச் சாமியார் பரபரப்பானவராக மாறிய பின் சென்னைக்கு வந்தது இதுவே முதல்முறையாகும்.
சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் உள்ள சங்கரா அரங்கில் "ருத்திராட்சக் கண்காட்சியை அவர்தொடங்கி வைத்தார். அவருடன் மதுரை ஆதீனமும் வந்திருந்தார்.
கண்காட்சியை தொடங்கி வைத்த பிறகு குட்டி சாமியார் நிருபர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போதுஅவர் கூறியதாவது:
நடிகர் ரஜினிகாந்த் என்னிடம ஆலோசனை எதுவும் கேட்கவில்லை. ராகவேந்திரரை தரிசனம் செய்து விட்டு அவர்சென்று விட்டார்.
10,000 மரக்கன்றுகளை நடத் திட்டுமிட்டுள்ளேன். இதுவரை 200 மரக்கன்றுகள் நட்டிருக்கிறேன். மரம் வளர்த்தால்மழை வளம் பெருகும். நாடு சுபிட்சமாகும்.
பிரச்சினைகளால் மன உளைச்சல் அடைந்ததில்லை. பகவான் இருக்கும்போது எனக்கு எந்த கவலையும் இல்லை.பெற்றோருடன் சமரசம் ஏற்பட்டு விட்டது. அவர்கள் எனது ஆசிரமத்துக்கு வந்து செல்கிறார்கள். என்னை வைத்துயாரும் அப்படி பணம் சம்பாதிப்பது இல்லை. அப்படி சம்பாதிக்கவும் பகவான் விடமாட்டார்.திருவண்ணாமலையில் ஆசிரமம் கட்டும் எண்ணம் ஏதுமில்லை என்றார்.
பேட்டியில் நிருபர்கள் கேட்ட சில குறும்பான கேள்விகளை குட்டி சாமியார் சாதுர்யமாக எதிர்கொண்டார்.
கேள்வி: சிறிய வயதில் துறவறம் பூண்டு இருப்பது குறித்து பலவிதமாக பேசுகிறார்களே?
பதில்: யார் எப்படி பேசினாலும் பகவான் பார்த்துக் கொள்வான். திருஞானசம்பந்தர் சிறுவயதிலேயே துறவறம்போகவில்லையா?
கேள்வி: சம்பந்தருக்கு பார்வதிதேவியே ஞானப்பால் கொடுத்ததாக புராணத்தில் சொல்லப்படுகிறது. உங்களுக்குஅப்படி ஏதேனும் அனுபவம் கிடைத்ததா?
பதில்: எனது கனவில் ஒருநாள் ஒருவர் தண்டத்துடன் வந்து என்னை அழைத்து செல்வது போல் இருந்தது.அதன்பிறகு தான் துறவறம் பூண்டேன்.
கேள்வி: இவ்வளவு சிறிய வயதில் எப்படி பிரபலம் அடைய முடிந்தது?
பதில்: பகவான் அனுக்கிரகமும், பத்திரிகையாளர்களின் ஆதரவும்தான் (!!) இதற்குக் காரணம்.
கேள்வி: நீங்கள் சினிமாவில் நடிக்கப்போவதாகக் கூறப்படுகிறதே?
பதில்: நான் சினிமாவில் நடிக்க மாட்டேன்.
கே: புனித யாத்திரை மேற்கொள்ளும் திட்டம் உள்ளதா?
பதில்: நாடு முழுவதும் உள்ள 108 திவ்ய தேசங்களுக்கு யாத்திரை போக வேண்டுமென்ற ஆசை. பகவான்அனுக்கிரகம் இருந்தால் அது நடக்கும்.
கேள்வி: சாதுர்மாத விரதம் இருக்கும்போது இப்படி வெளியே சுற்றலாமா?
பதில்: பகவான் எங்கும் இருக்கிறான். ஆன்மீக செயல்கள் நடக்கும் இடத்திற்கு போவதில் தவறு ஏதும் இல்லை.விரதம் இருக்கும்போது இரவில்தான் வெளியே தங்கக்கூடாது. இன்று இரவே நான் சேலம் சென்று விடுவேன்.
கேள்வி: நீங்கள் தலித்துக்கள் பகுதியில் உள்ள கோவில்களுக்கு செல்வீர்களா?
பதில்: அங்கும் சென்று கொண்டு தான் இருக்கிறேன். நான் சாதி, மதம் பார்ப்பது இல்லை.
கேள்வி: நீங்கள் மனப்பாடம் செய்து வைத்து வேத சுலோகங்களை ஒப்பிப்பதாகக் கூறப்படுகிறதே?
பதில்: நான் 3 வருடம் மந்த்ராலயத்தில் வேதம் படித்தேன். எனக்கு புரிந்ததை நான் மற்றவர்களுக்குச்சொல்கிறேன்.
கே: உங்களை போன்ற சிறுவர்களுக்கு (!) என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
ப: திருப்புகழ், தேவாரம், திருவாசகம் ஆகியவற்றை படித்து ஆன்மீகத்தோடு வளர வேண்டும். இதற்காக நான்பள்ளிகளுக்குச் சென்று சிறுவர்களுக்கு பாடம் நடத்தப் போகிறேன்.
கே: அயோத்தி பிரச்சினை குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்: அது தொடர்பாக நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.
கேள்வி: நீங்கள் சைவத்தை பரப்புகிறீர்களா அல்லது வைணவத்தை பரப்புகிறீர்களா?
பதில்: இரண்டையுமே பரப்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
குட்டி சாமியாருக்கு அருகே இருந்த மதுரை ஆதீனம், இந்த ஆன்மீக செடி வளர்ந்து மரமாக எனது ஆதரவு என்றும்நிரந்தரமாக இருக்கும் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications