இந்துக்களை அவமதிக்கிறார் டி.ஆர். பாலு: பா.ஜ.க
சென்னை:
மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு இந்துக்களை அவமதித்து வருவதாக பா.ஜ.க. தலைவர் ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் இன்று நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
முத்திரைத்தாள் மோசடியில் சிபிஐ ஆழமாகவும் அரசியல் தலையீடுகளை அனுமதிக்காமலும் விசாரிக்க வேண்டும்என்றார்.
அப்போது அவரை இடைமறித்த நிருபர்கள், ரஜினியின் மேனேஜர் மூலம் முத்திரைத் தாள் மோசடி மன்னன்தெல்கியிடம் இருந்து ரூ. 20 கோடி பெறப்பட்டு வீரப்பனுக்குத் தரப்பட்டதாக சொல்கிறார்களே? என்று கேட்டனர்.
அதற்கு பதிலளித்த ராதாகிருஷ்ணன், நான் யார், யார் என்று கூறவில்லை. யாராக இருந்தாலும் சிபிஐ நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று தான் சொல்கிறேன் என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில்,
திமுக தலைவர் கருணாநிதியும் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவும் இந்துக்களை தொடர்ந்து அவமதித்துவருகின்றனர். கடவுள் மறுப்பு, இந்துவாகப் பிறந்ததற்கு அவமானப்படுகிறேன் என்று பாலு பேசியுள்ளார். இதுகண்டிக்கத்தக்கது. இதை தேர்தலுக்கு முன் பாலு பேசியிருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட பேச்சை பிற மதத் தலைவர்கள் இருக்கும கூட்டத்தில் அரசியல் தலைவர்கள் பேசுவதைகண்டிக்கிறோம். எல்லா மதங்களையும் அரவணைத்துச் செல்வதே மதசார்பின்மையாகும்.
எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்துக்கள் திருடர்கள் என்று கூறி தேர்தலில் பாலு ஜெயிக்கட்டும்பார்க்கலாம்.
மதமாற்றத் தடைச் சட்டத்தை தமிழக அரசு மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றார்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications