இயக்குநர் பாலுமகேந்திராவுக்கு மாரடைப்பு
சென்னை:
பிரபல இயக்குநர் பாலுமகேந்திராவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காமிராக் கவிஞர் என்று அழைக்கப்படும் பிரபல இயக்குநர் பாலுமகேந்திரா பல புகழ் பெற்ற படங்களைஇயக்கியவர். கமல்ஹாசனுக்கு மூன்றாம் பிறை மூலம் தேசிய விருது வாங்கிக் கொடுத்தவர்.
ரஜினிகாந்த் நடித்த முள்ளும் மலரும் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அழியாத கோலங்கள், மூடுபனி,நெஞ்சத்தைக் கிள்ளாதே, மீண்டும் கோகிலா, சதி லீலாவதி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர்.
சமீப காலமாக அதிக படங்களை இயக்காமல் அமைதியாக இருந்து வந்த பாலுமகேந்திரா, "சுள்ளான்" தனுஷைவைத்து அது ஒரு கனாக் காலம் என்ற படத்தை இயக்கி வந்தார்.
சமீப காலமாக கால்ஷீட் சொதப்பலுக்குப் பெயர் பெற்றுள்ள தனுஷ், பாலுமகேந்திரா படத்திற்கும் டேக்கா கொடுக்கஆரம்பித்தார். இதனால் வெறுத்துப் போன பாலுமகேந்திரா படத்தை இயக்குவதை நிறுத்தி விட்டார்.
பின்னர் பல்வேறு சமரசங்களுக்குப் பிறகு படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. இரவு பகலாக படப்பிடிப்பைநடத்தி வந்தார் பாலுமகேந்திரா. முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இரண்டாவது கட்டமாக ஊட்டியில்சில காட்சிகளைப் பதிவு செய்ய முடிவு செய்திருந்தார் பாலு.
இதற்காக கார் மூலம் அவர் ஊட்டிக்குக் கிளம்பினார். ஆனால் வீட்டை விட்டுக் கிளம்பிய சிறிது நேரத்திலேயேஅவருக்கு நெஞ்சு வலித்துள்ளது. இதையடுத்து வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டார் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications