மெளன ஊர்வலங்கள், மோட்ச தீபங்கள், கடை அடைப்புகள்
சென்னை:
கும்பகோணத்தில் 90 குழந்தைகள் பரிதாபமாக இறந்த சம்பவத்தையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறுபகுதிகளில் கோவில்களில் மோட்ச தீபங்கள் ஏற்றப்பட்டன. இதுதவிர அமைதி ஊர்வலங்களும், கடைஅடைப்புகளும் நடந்த வண்ணம் உள்ளன.
90 பேரை பலி கொண்டுவிட்டு அமைதியாக நிற்கும் கிருஷ்ணா பள்ளி முன்பிருந்து நேற்று அமைதி ஊர்வலம்தொடங்கியது. ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர். பின்னர் நடந்த இரங்கல் கூட்டத்தில் பலரும்உருக்கமாகப் பேசினர்.
சம்பவம் நடந்த இடத்தில் தமிழக அரசு நினைவுப் பூங்கா அமைக்க வேண்டும் என்று கூட்டத்தில் பேசியவர்கள்கோரிக்கை விடுத்தனர். இதற்காக ஆகும் செலவில் ரூ. 5 லட்சம் நிதியை கும்பகோணம் மக்களே கொடுக்கத்தயாராக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இந்த ஆண்டு எந்தப் பண்டிகையையும் கொண்டாடப் போவதில்லை என்றும் கும்பகோணம் மக்கள்சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை, தருமபுரி ஆதீன மடங்களில் மோட்ச தீபம் ஏற்றி இறந்த குழந்தைகளின் ஆத்மா சாந்தி அடையபிரார்த்திக்கப்பட்டது. இதேபோல, மேலூர் அருகே உள்ள சொக்கம்பட்டியில் தீபம் ஏற்றி அக்கிராமத்தினர் அஞ்சலிசெலுத்தினர்.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் நகரில் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் மெளன ஊர்வலம்நடந்தது. காந்தி மண்டபத்தில் சர்வமத வழிபாடு நடத்தப்பட்டது.
கோவை மாவட்டத்தில் நேற்று கடை அடைப்பு நடத்தி இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.அமைதி ஊர்வலம் பல்வேறு ஊர்களில் நடத்தப்பட்டது.
தமிழகத்தைத் தாண்டி, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள்மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications