குளத்தில் மூழ்கி 4 சிறுமிகள் சாவு
Subscribe to Oneindia Tamil
காட்பாடி:
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே குளத்தில் மூழ்கி 4 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காட்பாடி அருகே உள்ளது அரும்பருத்தி கிராமம். இக் கிராமத்தைச் சேர்ந்த 4 சிறுமிகள், குளத்தின் அருகே மாடுமேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு சிறுமி குளத்தில் விழுந்து விட்டாள்.
அந்த சிறுமியைக் காப்பாற்றுவதற்காக மற்ற 3 சிறுமிகளும் குளத்தில் இறங்கியுள்ளனர். ஆனால் நான்குசிறுமிகளும் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
இச் சம்பவம் அரும்பருத்தி கிராமத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications